சங்ககாலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் பௌத்தக் குறிப்புகள்


அண்மையில் மதுரைக்கு அருகே உள்ள சமணர்மலையில் கி.பி. 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் எழுதியுள்ள வாசகம்:
”பெரு-தேரூர் ஊழி தாஞை அயம்”
= peru-tērūr ūḻi tāñai ayam 

This Tamil Brahmi inscription (2nd century BC) can be translated as:
"the pool (ayam) gifted (taañai < daanaa) as a service (uuzhi) by peru-tErUr (village)"

தேரூர் - கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் ஊராகும். தேரான்குளம் என்பதும் அவ்வூர் அருகே உள்ளதற்கான கல்வெட்டுகள் உள்ளன. தேரகாதை, தேரிகாதை என்பவை கி.மு. 600-லிருந்து பௌத்தர்களின் நூல்களாக விளங்குபவை. இந்தக் கல்வெட்டின் அருகிலேயே பேரூர் எனக் குறிக்கும் கல்வெட்டில் முசிரிக்கோடன் இளமகன் என்பவரையும் குறிப்பிடுவது, கல்வெட்டின் நான்காம் எழுத்து “ரூ” என ஐராவதம் மகாதேவன் மற்றும் சில கல்வெட்டாய்வாளர்கள் படிப்பதைச் சரியெனக் காட்டுகிறது. ஆனால், “தாஞை” என்ற சொல்லை “தாதை” என்று ஐராவதம் படிப்பதாக இந்து நாளிதழ் (ஜனவரி 5, 2013) தெரிவிக்கிறது. ஆனால், அவ்வெழுத்து “ஞை” என்பதற்குக் கட்டம் (square) போன்ற வடிவமும், இடமாகச் செல்லும் மூன்று மீக்குறிகளும் (diacritic marks) காட்டுகின்றன. முனைவர் வெ. வேதாசலம் அவர்கள் அளித்த அக் கல்வெட்டுப் பகுதிகளை இணைக்கிறேன். இந்த ஒளிப்படங்கள் முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்குக் காப்புரிமை உடையன. The photos are the courtesy of Dr. V. Vedachalam, Madurai.






'தி ஹிந்து' (5-Jan-2013) நாளிதழில் 3-வது மீக்குறி மங்கலாகத் தெரிவதை அவதானிக்கலாம்: