rajakii-as-loan-translation-and-puram-299

இன்று திருவள்ளுவன் இலக்குவனாரின் வலைப்பதிவு படித்தேன். அதில், மணற்கேணி இதழில் வெளியிட்ட ’புறநானூறு கூறும் இழிசினன் இழிமகன் அல்லன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். இந்தியாவின் பண்டைச் சமுதாய வரலாற்று ஆய்வுகளுக்குச் சங்க இலக்கியம் எவ்வகையில் தரவுகளை அளிக்கிறது? சங்க இலக்கியம் சொல்லும் முக்கியமான சில சொற்களின் பொருள் யாது? என்பதை ஆராய்வோம்.

”இழிசினன்இழிபிறப்பாளன் என்பதற்குப் புலையன் என்று பொருள் தருகின்றனர். புலையன் என்பதை இழி சொல்லாகக் கருதுவதும் தவறே. எனவேபுலையன்,புலைத்தி,புலையர் என வரும் இடங்களையும் பார்ப்போம்.” - - திருவள்ளுவன் இலக்குவனார் 


இழிசினன், இழிபிறப்பாளன், புலையன் - இச் சொற்களின் மூலப்பொருள் விரிவாகத் தமிழறிஞர்களால் பல்கலைக்கழக வெளியீடுகளில் ஆராயப்பட்டுள்ளது. விரிவாக, இந்தாலஜி, CTamil (Paris) போன்ற குழுக்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக விரிந்த அளவில் கருத்தாடல்கள் செய்யப்படுள்ளன. சங்க இலக்கியப் பாடல்கள், பதிப்புகள், தமிழறிஞர்கள் எழுதிய செய்திகளில் இருந்து இச்சொற்களின் தொடக்ககால வரலாற்றைத் தொகுத்துக் காண்போம். சில செய்திகள் தமிழ் ஆராய்ச்சி செய்வோருக்குப் புதிதான செய்திகள். பரவலாக இன்னும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் அறியப்படாதவை.

திருவள்ளுவனார் பதிவு தொடங்குகிறது:
”சங்க இலக்கியங்களில்  செருகப்பெற்றுள்ள சாதியாண்மைக் கருத்துகளை அறிந்து செம்மையாக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு உள்ளது. புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில்  ஆரியர் வருகைக்கு முன்னர்  இயற்றப்  பெற்ற பாடல்களும் உள்ளன. ஆரியர் வருகைக்குப் பின்னர் இயற்றப் பெற்ற பாடல்களும் உள்ளன. என்றாலும் ஆரியத் தாக்கத்திற்குப் பெரிதும் ஆட்படாத பாடல்களே மிகுதியாக உள்ளன. ஆனால்,  ஏடு படி எடுப்போரின் தவறுகளாலும்ஆரியமே உயர்வு என எண்ணியோராலும் ஆரியத் திணிப்பாளர்களாலும் பாடல்களிலும் உரையாசிரியர்களின் அவர்கள் காலச்சூழல்களில் தவறான புரிந்துணர்வில் எழுதப் பெற்ற உரைகளினாலும் சாதியக் கருத்துச் செருகல்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வகையில்புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெறும் இழிசினன்இழிபிறப்பாளன்புலையன் முதலான சொற்கள் பற்றிய ஆய்வு  சாதியச்செருகல்கள் பற்றிய விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தும்.”

அறிஞர் செல்வாவின் தமிழ்மன்றம் குழுவில் என் இனிய நண்பர் ஜ்யான் - லுக் செவியார் இக்கட்டுரை பற்றி இராமகி ஐயாவிடம் குறிப்பிட்டிருந்தார்:
[Begin Quote]
Dear iraamaki, thank you.

This post (for which you give the link) seems to be identical
with the article which came out
in issue 19 of மணற்கேணி
(dated July -- August 2013).

I see on pages 55-61 of my copy of the journal
the same title,
புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்
the same first sentence
"சங்க இலக்கியங்களில்  செருகப்பெற்றுள்ள சாதியாண்மைக் கருத்துகளை அறிந்து செம்மையாக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு உள்ளது."
and the same last sentence
"தமிழ் நெறிக்கேற்பத் தமிழ் இலக்கியப் புரிதலுணர்வை வளர்க்க வேண்டும்."
[End Quote]

  ”இழிசினன் என்பதைஇழிசினன் என இருசொற்களின் சேர்க்கையாகப் பார்த்தால் <சினன் என்பது புத்தனைக் குறிக்கின்றது. புத்தன் என்றால் புத்தி உள்ளவன் அறிவார்ந்தவன் எனப் பொருளாகிறது. அப்படிப் பார்த்தால் > இழிதல் தொழிலில் அறிவாண்மை உடையவன் எனப் பாராட்டாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவேஇழிசினன் என்றால் இழிவானவன் என எண்ணுவது எவ்வளவு பெருந்தவறு!”

தமிழ் முனைவர் ழான்-லுக் எவ்வாறு இழிசினன் என்னும் சங்கச்சொல்லை மொழிபெயர்க்கிறார் என்று திருவள்ளுவன் ஐயாவும், தமிழறிஞர்களும் பார்க்கவேண்டும்: The concept of ticaiccol in Tamil grammatical literature and the regional diversity of Tamil classical literature, Chevillard J.-L. in Streams of Language: Dialects in Tamil, M. Kannan (Ed.) (2007) 21-50
http://halshs.archives-ouvertes.fr/halshs-00442188/

pg. 29, concluding paragraph of JLC's paper translates iḻiciṉar as outcastes: “It is difficult to believe that this meaning of koṭuntamiḻ could have been  invented by Beschi. At least one example of a regional word being  considered as also belonging to an inferior variety of Tamil is attested in  Mayilainātar’s commentary on the Naṉṉūl. Under N266m, in an  enumeration which illustrates maṅkalamarapu, he writes:
(27) iḻiciṉar cōṟṟaic coṉṟi yeṉṟum “the fact that outcastes (iḻiciṉar) call the  rice (cōṟu) ‘coṉṟi’” (N266m)  As we have seen, in charts 2 and 4, the word coṉṟi has been said elsewhere  to be a ticai-c-col representative of Teṉpāṇṭi nāṭu (a southern region). It is,  moreover, mentioned by the Tivākaram (as one of the designations of cōṟu)  and is attested in Sangam literature (in perum. 131, 193; matu. 212;  kuṟi. 201; naṟ. 281-5; kuṟun. 233-6; patiṟṟu. 24-22, puṟam 197-12). The fact  that Mayilainātar, a northerner, could consider it as being typical also of  iḻiciṉar, seems to indicate that he heard some people use a word which he  would not have used himself. It would, however, require the joint efforts of a  sociolinguist and a time machine to find out what the best explanation for  remark (27) is. I leave it therefore to future researchers in the field."

இழிசினர் எனும் முக்கியப் பதம் பற்றி ஆய்வுக்குழுக்களில் பேசியதும், நான் எழுதியதும் காண்போம்.

[...]

---------------

சங்க இலக்கியம் பற்றி குழப்பங்களை ஏற்படுத்த இன்றைய அஜெண்டாக்கள் 
பயன்படுவதைப் பார்க்கிறோம்.  இது பற்றி அண்மையில் தமிழ்ப் பேராசிரியர்கள்
விரிவாக விளக்கியிருந்தனர்.

வீட்டுவிலக்குப் பெண்களை சங்க காலத்தில் தீட்டு (மலையாளத்தில் தீண்டம்) என
ஒதுக்கிவைக்கும் செயல். இதைக் குறித்துப் பாடுகிற சங்கப் பாடல்
புறநானூற்றிலே உள்ளது. இந்தியா முழுமையும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன,
முக்கியமாக திராவிட மொழிபேசும் மக்களுடன் ஒப்பிடலாம். இந்தப் பாடலை
தமிழறிஞர்கள் அருமையாக விளக்கியுள்ளனர். 

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
5 தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே.

ஆனால், அஜெண்டாக்களுக்கு ஒத்துவராத இதுபோன்ற பாடல்களை 
என்ன செய்வது எனத் தெரிவதில்லை சிலருக்கு. அதனால், புலை 
என்றால் பொலி என்று எழுதி வருவதைத் தமிழறிந்த பேராசிரியர்கள்
பார்த்து நகைக்கின்றனர். காலத்தால் நிற்காத புலை = பொலி போன்றவற்றின்
ஆதரவு இன்றைய அஜெண்டாக்கள், தமிழ் இந்தியாவின் சமூக அமைப்பை
2000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிந்துகொள்ள உதவாதவை என்று
சம்ஸ்கிருத, ப்ராகிருத, த்ராவிட, செந்தமிழ் பேராசிரியர்கள் பலரும்
புரிந்துகொண்டுவிட்டனர். 

புலை- என்னும் சொல் தமிழிலும், பிற த்ராவிட மொழிகளிலும் அரத்தம் 
என்னும் பொருளுடையது. உடற்கழிவு ரத்தம் கொண்ட சீலை போன்றன 
தீட்டாகக் கருதப்பட்டன. இதனால் ஏகாலியரை புலைத்தி என்றழைக்கும் 
பெயர்ச்சொல் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கிறது. இக் கருத்து
வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரஜகீ, ரஜகன் என்று வருகிறது.
புலையன், புலைத்தி என்னும் சொற்கள் மிக ஆழமான வரலாறுடையவை.
புலை- என்ற சொல் வீட்டுவிலக்கு இரத்தம் என்று பல திராவிட மொழிகளில்
உள்ளது, அவ்வாட்சிக்கு வேராக இயங்கும் புலை தரும் சொற்கள் புலவு/புலா(ல்).
புலவு உண்ணும் விலங்கு புலி என அறிவீர்கள். இன்று இந்தியாவில் சாதிக் கொடுமைகள் 
இல்லை என்பதை பத்திரிகைகளில் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். கிரேக்க நாட்டில் 
அடிமைகள் இருந்தனர், எத்தனையோ உன்னதங்களும் இருந்தன. அதுபோல், எத்தனையோ 
உயர்ச்சிகளை கொண்ட இந்தியாவில் சாதி ஒரு கூறாக 3500 ஆண்டுகளாய் உள்ளது
என்பதைக் காட்டும் பாய்ண்ட்டர்ஸ் தருவது வடமொழி, சங்க இலக்கியங்கள்.
தற்கால அஜெண்டாவுக்காக, புலை என்றால் பொலி என்பதற்கு ஆதரவு காட்டவேண்டுமா?
காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், கம்யூன்ஸ்ட்ஸ் (உ-ம்: இந்து ராம்),
தலித் கட்சிகள் பல (உ-ம்: திமுகவின் விடுதலைச் சிறுத்தைகள்), ...
போன்ற பலர் இன்று இந்தியாவின் சாதிகளை ஒழித்துவருகின்றனர்.

புகழ்மிக்க அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேருரை - பேரா. Donald Lopez பௌத்தத்தின்
பேராசிரியர் ஒருநூலை வாங்கினேன், சென்ற வாரஇறுதியில். Scientific Buddha என்பது 
நூல் தலைப்பு. புடகம்/புண்டரிகம் புள்- என்னும் வேர் தரும் சொல் என்றும் 
‘ஓம் மணிபத்மே ஹூம்’ என்னும் பொதிகை அவலோகிதன் பற்றியும், தாமரைக்கண்ணன்
என்று இந்திரனை வள்ளுவர் பாடக் காரண விளக்கமும் பேரா. லோப்பஸ் ஐயா
போன்றோர் நூல்களாலே தான் எனக்கு விளக்கமாகின்றன. பல பௌத்த/சமண நூல்கள்
அழிக்கப்பட்டுவிட்டதால் சுமார் 10 மொழிகள் அறிந்த பேராசிரியர்கள் ஆய்வுகளால்
இந்தியாவின் வரலாற்றை அணுகவேண்டியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில்
பௌத்தம் பரவிவருகிறது. ஆனால், அந்த பௌத்தத்திற்கும் பழைய பௌத்தத்துக்கும்
எந்தத் தொடர்புமில்ல்லை என்பதே ஸ்யண்டிஃபிக் புத்தர் என்னும் நூலின் மையக்கரு,
புத்தர் எத்தனையோ அவதாரம் எடுத்தார். இது 21-ஆம் நூற்றாண்டின் அவதாரம்! என்கிறார்
பேராசிரியர். அதுபோல்தான், அஜெண்டாகாரர்கள் புலைத்தி, கலம் தொடா மகளிர்
பற்றிச் சொல்வதாகும். ஆனால், தமிழின் பேராசிரியர்கள் கூறுவதையும் கணக்கிலெடுத்தால்
சங்கத் தமிழும், அது சுட்டும் சமூகமும் புரிந்துகொள்ளலாம்.

2000+ ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மற்றும் இந்திய சமூக அமைப்பைக்
காண மூல நூல்கள் - சங்கம், வடமொழி ஒப்பீட்டாய்வுகள் அவசியம்.
இதை இன்றைய அஜென்டாக்காரர்கள் சொல்வதுபோல் படித்தால் நியூ யார்க் டைம்ஸ்
ஆகும். பழைய இந்தியாவின் சமூக அமைப்பும், பழக்கவழக்கங்களும் புரியாமல்
மறைக்கப்பட்டுவிடும். உம்: அணு, அணங்கன்/அனங்கன் என்னும் சொற்கள்
சங்கத் தமிழின் அணங்குக் கோட்பாடு, அணுங்கு/அழுங்கு (Indian Pangolin) போன்றவை
காட்டும் இந்தியாவின் பண்டைச் சரிதம் முக்கியம். ஆழ்- > ஆணி இருக்குவேதத்திலேயே
இத் தமிழ்ச் சொல் இருக்கிறது. அதுபோல், தமிழர் இன்றும் அழுங்கு அணுங்கு என்னும்
விலங்குப் பெயர் சொல்கின்றனர், ஆழ்வார் என்ற சொல் புத்தருக்கும், தீர்த்தங்கரருக்கும்
முதலில் அவர்கள் யோகு, தியானத்தில் ஆழ்பவர்கள் ஆனதால் கல்வெட்டுக்களில்
வருகிறது. தியானமூர்த்தி தக்ஷிணாமூர்த்திக்கு ஆழ்வார் என்கிறது தேவாரம்.
சில நூற்றாண்டுகள் சென்றபின் விஷ்ணு/கிருஷ்ணன் பக்தியில் ஆழ்வாரை
ஆழ்வார்கள் என்றே போற்றுகிறது ஸ்ரீவைஷ்ணவம். ஆள்தல், ஆழ்தல் இரண்டும்
வேறுபட்ட மூலச்சொற்கள். ஆழ்-தல் ஆண்டி (கொத்தாண்டி - அவலோகிதன்,
கவராண்டி - வச்சிரபாணி, மாயாண்டி - விஷ்ணு, பேயாண்டி - சிவன், 
விருமாண்டி - தியானத்தில் உள்ள வேத பிரமா). ஆண்டாள் < கிருஷ்ணனில் ஆழ்பவள்.
ஆழ்வார் என்ற சொல் ஆள்தல் என்பதில் இருந்து உருவானதன்று என்று தமிழ்
வரலாற்றை, கலைவரலாறை பார்த்தால் தெரியும்.

பேரா. Donald Lopz, Scientific Buddha நூல் ஞாபகம் வந்தது. முனைவர் ழான்-லுக் செவியார்
திருவள்ளுவன் இலக்குவனாரின் கட்டுரையின் தொடக்கம் பற்றி எழுதியிருந்ததை
இன்று படிக்கும்போது. இன்றைய அஜென்டாக்கள் சங்க இலக்கியங்களின் பொருளை
உணராமல் செய்கின்றன. ஆனால், தமிழின் பேராசிரியர்கள் விளக்கி எழுதி வருவதால்
பொருள் விளங்கிவிடும் என நினைக்கிறேன்:

1 comments:

iraththinamoorthi said...


மகிழ்ச்சியாக இருக்கிறது;உங்கள்

ஆழமான ஆய்வுகள் தொடரட்டும்;

வாழ்த்துக்கள்,அன்புடன்,

பூந்துறயான்,கள்ளிப்பட்டி