வேளாண்மை வரலாறு பதிந்துள்ள மருதத்திணைச் செய்யுள் - நற்றிணை 310 - உவேசா குறிப்பு

தமிழின் சங்கப் பாடல்கள் இந்தியாவின் பண்டைய வரலாற்று ஏடுகளை அறிந்து ஆராய அறிஞர்களுக்கு ஓர் கருவூலம். இந்தியாவின் உயர்தனிச் செம்மொழிகளின் வரிசையில் தமிழை நிலைநிறுத்துவது.

கல்கி அவர்களால் தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்றவர் தாக்‌ஷிணாத்ய கலாநிதி உ. வே. சாமிநாதையரவர்கள். உவேசா தேடிச் சேர்த்து, ஆராய்ந்து ஏடுகள், காகிதத்தில் எழுதிய குறிப்புகள் இவற்றைக் கொண்டு நற்றிணை சங்கநூலை உவேசா நூலகம் (கலாக்ஷேத்ரா, அடையாறு) 1989-ல் பதிப்பித்துள்ளது. தமிழின் வரலாற்றை எழுதிய முதல் தமிழன் பரணர் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். உ-ம்: பேரா. வ. சுப. மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலை. சங்கத் தமிழின் மகாகவிகள் இருவர்: கபிலரும் பரணரும். பரணர் தான் வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டதை அறிவிப்பதில் முன்னிற்பவர். அவர் அப்போதைய மருதத் திணையில் ஊரன் எனப்படும் ஊர்த்தலைவர் ஆகிய நிலக்கிழார்களின் வாழ்வியல் முறைகளையும், தங்கள் பண்ணைகளில் எவ்வாறு கால்நடை மேலாண்மை செய்தனர் என்பதையும் நற்றிணை 310-ல் பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவின் பழைய சாதி அமைப்பின் முக்கிய அங்கம் ஜாதிகளுக்கிடையான உணவுப் பிரமிட் முறை. யார் யார் எந்தெந்த உணவை உண்ணலாம் என்ற சமுதாயக் கோட்பாடு அக்காலங்களில் சேரிகளை அடையாளம் காணச் செய்தது. உ-ம்: பார்ப்பனச்சேரி. சமஸ்கிருதத்திலே மாட்டிறைச்சி புசிப்போர் பற்றிய குறிப்புகள் பல இருப்பினும், தமிழில் இப் பழைய வேளாளர் நாகரீகத்தின் ஒரு பகுதியை வரலாறாக முதலில் பதிவு செய்பவர் மகாகவி பரணர் ஆவார். இதன் தொடர்ச்சியைப் பரணருக்குப் பின் வந்த பல கவிகளும் 1500 ஆண்டுகளில் பாடிச் சென்றுள்ளனர். காட்டுகளாக, வேளாளர் அப்பர் அடிகளும், மாணிக்கவாசகர் தன் திருக்கோவையாரிலும், பொய்யாமொழிப்புலவர் (13-ஆம் நூற்.) தஞ்சைவாணன்கோவையிலும், சொக்காப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டிலும் பாடியவை தமிழ்த்தாத்தா உவேசா அவர்களும் அறிஞர் பின்னத்தூரார் தெரிந்தெடுத்த நற்றிணை 310 அடிகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளன. அவற்றை ஈண்டு அளிக்கிறேன். சங்க கால நாகரிகத்தின் சில கூறுகள் தெளிவாகும். விறலி விடுதூதுகளிலும், கலம்பகங்களிலும், கோவை இலக்கியங்களிலும் தேடினால் நற்றினை 310-ல் முதலில் பதிவாகும் செய்தியை விளங்கிக்கொள்ள ஏதுக்கள் ஆகும். இந்திய ஜாதி அமைப்பின் உணவு பிரமிட் முறையை ஏராளமான பழைய தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. 20-ஆம் நூற்றாண்டில் கலெக்டர் ஆஷ் என்பவனைச் சுட்டுகொன்ற சுதந்திரப் போராட்ட வீரரின் மரணத்தின் முன் எழுதிய சாசனத்திலும், கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி வாழ்க்கையிலும், வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார் தமிழ்நாட்டில் பிராமணர் ஏன் வேத கால வழக்கமாகிய மாடு உள்ளிட்ட புலால் உணவைத் துறக்கலாயிற்று என்பதையும் விளக்கங்களிலும் 2000 ஆண்டு வேளாண்முறை இருப்பதை அறியலாம். இன்று காந்திஜி, அம்பேத்கார், பெரியார், மேலைநாட்டு மிஷனரிகள், ஊடகங்கள் போன்றவற்றால் வட, தென் செம்மொழி இலக்கியங்களில் 2000 ஆண்டாக உள்ள உணவுப் பிரமிட் முறை மாறிவருகிறது கண்கூடு. உ-ம்: ஹோட்டல் உணவுகளில். கிரேக்க நாகரீகத்தில் இருந்த பழைய அடிமைமுறை (slavery) இன்று காந்திஜி வழியை மேற்கொண்ட மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களால் அமெரிக்காவில் மாறிவிட்டது அல்லவா? அதுபோல், இன்று மேலை நாடுகளின் நகரங்களை மாதிரியாகக் கொன்டு வளர்ந்துவருகிற இந்திய நகரங்களில் ஜாதி இல்லாமல் அழிந்து வருகிறதை அவதானிக்கலாம்.

நற்றிணை 310-ல் பரணர் புலப்படுத்தும் இந்தியச் சமூக வரலாற்றின் செய்திக்கு அரணாக எதுகை இலங்குகிறது. ஈற்றடிகள் நான்கிலும் இரண்டாம் எழுத்தாய் தனியொற்றெழுத்து - லகர வர்க்க எதுகை - காண்க. கன்று < கல்-/கரு. கன்று என்னும் மூலத்தை களிறு என மாற்றினால் வெகுளிச்சுவையும், பழந்தமிழ்ப் பொருளும் போய்விடுகிறது. மாமன்னர்கள் பெரும்போர் வெற்றிக்குப் பின்னர்தான் களிற்றுப் பரிசில் வழங்கினர், பார்க்க அகநானூறு 106, அதற்கும் பின்னர் யாழ்ப்பாண மன்னன் பரிசில் அளிக்க அந்தகக்கவி கலங்கிப் பாடிய பாடல். இந்த அகநானூற்றுப்பாடலுக்கு நேர்மாறான பொருள் உடையது நற்றிணை 310. இது அன்றாடம் நிகழும் வளங்கெழு மருத ஊரின் வாழ்க்கை. போரோ, வென்றியோ இல்லை. நற்றிணையின் இப்பாடல் பரத்தைகளைக் கூட்டுவிக்கும் பாணனை வெகுண்டு செறுச்சொல் கூறி வாயில் மறுக்கும் பாட்டிது. ஊரன் அரசனும் அல்லன், அவனிடம் பாணனுக்கு அளிக்கக் களிறும் இல்லை. பாட்டின் எதுகையும், உட்பொருளும் இழக்காமல் இருக்க வேன்டுமெனில் உவேசா, பின்னத்தூரார் பதிப்பே சரியானது என்பது தேற்றம். வேளாளர் வரலாற்றுச் செய்தி தரும் பரணருக்கு நாம் செய்யும் மரியாதையும் ஆகும். தற்கால அரசியலுக்காக - உ-ம்: தமிழரிடம் ஜாதி இல்லை - நற்றிணை 310 மூலத்தை மாற்றுவது சரியாகாது. மகாகவி பரணர் வரலாற்று நிபுணர், பழைய சமுதாய சரித்திரத்தின் முக்கியக் கூறு ஒன்றை அளித்துச் சென்றுள்ளார். பழைய வேளாண்முறைகளை விளக்கும் அரிய பாடல்.

வேளாண்மை சிந்து சமவெளியிலே இந்திய துணைக்கண்டத்தில் தோன்றுதலும், சிந்து நாகரீகம் அதன் உச்சத்தை 4500 - 4000 ஆண்டு முன்னர் அடைதலும், பின்னர் 3000 ஆண்டு முன்னர் வேளாண்மையின் செய்தொழில்களும், வேளிரும் பஞ்ச திராவிடநாடுகளில் வேளாண்மை சிறந்த குஜராத்தின் துவாரகையில் இருந்து தென்னாடும், இலங்கையும் அடைதலும், நெல் வேளாண்மை, குதிரை (ஐயனார்), இரும்பு (வாள்) நுட்பங்கள் என்ன மாற்றங்கள் தெற்கே கொண்டுவந்தன என்பதை அறிய எதிர்காலத்தில் விஞ்ஞானம் மிக உதவும். உ-ம்: வேள்விகளில் காளைகள் பலி என ஆரியர்கள் நடத்த, வேளாளர்கள் மாடுகளைப் பலியிடலை தடுத்துவிட்டனர். 2500 ஆண்டு முன்னரே. சமண நூலான நாலடியாரை வேளாண் வேதம் எனல் தமிழ்மரபு. வடக்கே இருந்து வரும் வேளிர்கள், வேளாண் சமூக பிரமிட் அமைப்பில் உணவுப் பழக்க வழக்கங்களை மேல்ப்பாலர், கீழ்ப்பாலர் என வரையறை செய்தனர். இன்று மாறிவரும் பழக்கங்கள் இவை. வேளாளர் மாட்டிறைச்சி உண்ணாமையும், சைவ உணவாளர்களும் (உ-ம்: சமணர்கள்), வேளாண் சமுதாயத்தில் சங்க காலத்தில் இணைக்கப்பெறாத ட்ரைப்ஸ் எனப்படும் கூட்டத்தினர் மாடடித்தல் போன்றனவும் தெளிவாக சங்க இலக்கியம் காட்டுகிறது.வேளாண்மை வளர்ச்சியில் தமிழகம் அடைந்த மாற்றங்கள் பற்றி ஜெனடிக்ஸ் ஆய்வுகள் இனி வரும் ஆண்டுகளில் பல செய்திகள் தரும் எனலாம். 2500 ஆண்டுகளாக இந்தியா முழுதும் விளங்கும் உணவுப் பழக்கங்கள் இல்லையேல் மாடுகள் வளர்க்க ஏராளமான நிலங்கள் தேவைப்படும்.

சங்க இலக்கியமாம் புறநானூற்றில் மாந்தர்களுக்கும் முதலிலே மாடுகளை வைத்துப் போற்றி முதுகுடுமிப் பெருவழுதி பாடல் இருக்கிறது: http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l1280641.htm
ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் மக்கட்
பெறாதோரும் எம் அம்பு கடி விடுதும்
நும்அரண் சேர்மின்‘.
ஆக்களின் உயர்ச்சியை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்திலும் மிகப் போற்றியுள்ளார்.
பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவியெனும் இவரைக் கைவிட்டு  (மதுரைக்காண்டம், வஞ்சினமாலை, அடி, 52-54) என்னும் இவரைத் தவிர்ந்த தீயவர்கள் மேல் தீ செல்லட்டும் என்ற கண்ணகியின் ஆணையும் காட்டும். பசுவை இவர் என்று உயர்திணையாய்க் கூறியுள்ளார் இளங்கோ அடிகள். பாரத நாட்டின் பழைய பண்பாட்டை செம்மொழி இலக்கியங்கள் பரக்கக் காட்டுகின்றன. புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது. ஆனிலை உலகம் என்று மேலுலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. வேறு எந்த விலங்குக்கும் இவ்வாறில்லை. “ஆவிற்கு நீர் என்று இரப்பினும்” - வள்ளுவர். ’ஆதந்தோம்பல்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் புறப்பாட்டைக் காட்டுவதும் அறியற்பாலது. ஆனைந்து என்னும் பஞ்சகவ்யம் சைவத்தில் என்றும் ஆராதிக்கப்படுவது.

---------------------------------------------------------------------------------------
உவேசா நூலகப் பதிப்பில் இப் பாடலைக் காண்போம் (பக். 559-560).



நற்றிணை 310.           மருதம்
                              பரணர் பாடியது


தோழி கூற்று 
(பரத்தை கூற்றும் ஆம்)


விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்   
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க                                         
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை             
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே   5     
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன் 
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்           
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை  
வள்ளுயிர்த் தண்ணுமை போல                          10   
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.

எ-து: வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது. (அல்லது) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.

பரணர்

 ப-ரை: விளக்கின் அன்ன - விளக்கைப் போன்ற, சுடர்விடு - ஒளி விடுகின்ற, தாமரை - செந்தாமரையின், களிற்றுச் செவி அன்ன - களிற்றின் செவியை ஒத்த, பாசடை - பசுமையான பெரிய இலைகள், தயங்க - விளங்க, உண்துறை - நீர் உண்ணும் துறையின்கண், மகளிர் - இறங்கிய மகளிர், இரிய - அஞ்சி ஓட, குண்டு - ஆழமான, நீர் - நீரையுடைய பொய்கையில், வாளை - வாளை மீன்கள், பிறழும் - துள்ளி விளையாடும், ஊரற்கு - தலைவனுக்கு, நாளை - நாளையன்று, மகட்கொடை நேர்ந்த - பரத்தையைக் கொணர்ந்து கொடுக்கும் தொழிலை மேற்கொண்ட, மடம்கெழு பெண்டே - அறிவற்ற விறலியே! தொலைந்த நாவின் - மெய் பேசுதலைத் தொலைந்த நாவினால், உலைந்த குறுமொழி - நிலைகுலைந்த இழிந்த நின் சொல்லுக்கு, உடன்பட்டு - உடன்பட்ட, தாயரோடு - பரத்தையின் தாய்மாரோடு சென்றுஎய்தி, வல்லை - விரைவாக, கன்று பெறு வல்சி - ஆவின் கன்றை உரித்து உணவாகப் புசிக்கின்ற, பாணன் கையதை - பாணன் கையிடத்து இருக்கும், தண்ணுமைபோல - பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை என்னும் வாத்யம்போல, உள் யாதும் இல்லதோர் - உள்ளே யாதும் அற்ற, போர்வை அம் சொல் - ஒரு மேற் போர்வை உடைய சொற்களை, ஒழிபுடன் சொல்லலை கொல்லோ? - உடன் தவிர்ந்து சொல்லுகின்றிலையோ? அவரையும் முயங்கச் செய்வாய்.

முடிபு: தயங்க இரிய பிறழும் ஊரற்கு எதிர்ந்த பெண்டே; போர்வை அம் சொல் சொல்லலை கொல் என முடிக்க.

கருத்து: விறலீ! பயனற்ற சொற்களைப் பரத்தையரின் தாயர்பாற் கூறுக, யான் நின் சொல் தேறேன் என்று வெகுண்டு தலைவி கூறினாள். 

வி-ரை: கண்டார்க்கு இனியன கூறும் தன்மையள் என்பாள் விறலியைத் தொலைந்த நாவினள் என்றாள். பிறர் அறியாதபடி மறைவாகப் பேசும் தன்மையள் என்பாள் குறுமொழியினள் என்றாள். இழிவு கருதாது மூத்தோரையும் புணர்க்கும் பெற்றியன் பெற்றியள் என்பாள் தாயரொடு சொல்லலை கொல் என்றாள். நின் சொல் என்னிடம் பலிக்காது என்றபடி.

இறைச்சி: வாளைமீன் தாமரை மலர் துன்புற, நீராடும் மகளிர் அஞ்சி ஓட, பொய்கை நீரிற் பாய்ந்து துள்ளும் என்றதன் குறிப்பு. தலைவன் யான் வருந்த, காமக் கிழத்தியர் அஞ்சி அகல, புதியதாக நீ புணர்த்திய பரத்தையிடத்தே சென்று தங்குவன் என்றபடி.

மெய்ப்பாடு - வெகுளி

பயன் - வாயின்மறுத்தல்

---------------------------------------------------------------------

பின்னத்தூரார் பதிப்பும் உரையும்:
310. பரணர்


திணை : மருதம்.

துறை : (1) இது, வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது.

(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைமகளது ஊடல் தீர்ப்பான் விறலியை விடுத்தலும் அவளை நோக்கிய தோழி, எங்கள் இறைவனுக்கு இன்னுமொரு பரத்தையை நாளைக் கொணர்ந்து கொடுக்க உடன்பட்டு வந்த விறலி! நின் பயனற்ற சொல்லை அப் பரத்தையரின் தாயர்பாலுங் கூறி அவரையும் முயங்க விடுப்பாய்கொலாமென்று வெகுண்டு கூறாநிற்பது.

(இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கற். 9) எனவரும் விதிகொள்க.

துறை : (2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉமாம்.

(து - ம்.) என்பது, வெளிப்படை, (உரை இரண்டற்குமொக்கும்.)

(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதனாற் கொள்க.

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே.


(சொ - ள்.) விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க - விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய, களிற்றின் - யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; உண்துறை மகளிர் இரியக் குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு - நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே - இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரோடு உடன் ஒழிபு - மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ வல்லைக் கன்று பெறு வல்சிப் பாணன் கையது வள் உயிர்த் தண்ணுமைபோல - நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள் யாதும் இல்லது ஓர் போர்வைச் சொல் - உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லலை கொல் - சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? எ-று.

(வி - ம்.) தாமரை அதன் மலருக்கு ஆகுபெயர். யாதுமில்சொல் பயனற்ற சொல். தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.

பரத்தை நயக்குமாறு வேண்டும் பொய்ம்மைகூறிப் புணர்ப்பித்தலின் தொலைந்த நாவினென்றாள். பிறர் அறியாதவாறு மந்தணமாகக் செய்தமைத்தலிற் குறுமொழியென்றாள். இழிதகவு கருதாது முதியோரையும் புணர்க்கும் இயற்கையையென்பாள், தாயரொடு சொல்லலை கொலென்றாள். நின் பயனற்ற சொல் பரத்தையர்க்கும் அவரன்னையர்க்கும் ஏற்பதன்றி இங்குப் பயன்படாதென்பதாம்.

இறைச்சி :- வாளைமீன் தாமரைவருந்த மகளிர் இரிந்தோடக் குண்டு நீரில் வெடி பாய்ந்து பிறழுமென்றது, தலைமகன் யாம் வருந்தக் காமக் கிழத்தியர் இரிந்தகல விருந்தாக நீ புணர்த்திய புதிய பரத்தையிடத்தே சென்று தங்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

-----------------------

Let us look at an English translation which is done by George L. Hart, Univ. of California, Berkeley.

What Her Friend said to the viRali dancer (NaRRiNai poem 310). 

The green leaves that look like the ears of great bull elephants
sway on the lotuses pouring out rays as if they were oil lamps,
and young women who go to get drinking water run away in fear
when the vaaLai fish jumps out from the deep water in his town --
listen, foolish woman who want to arrange for him to meet
his courtesan [lit. woman] tomorrow - you with your useless tongue,
your stupid, small words -- you stayed with the mothers
[of those women], and they agreed with you, completely
clueless -- and at once you said your lovely words, didn't you,
mere coverings of emptiness like the huge taNNumai drum
with its great voice in the hand of your PaaNan who is so low
they give him a calf to eat. [lit.: who receives a calf for his food]. 

                                 Translation by George L. Hart. 

[viRali is the village dancer, spouse of the PaaNan singer. Commentators mention that these are the angry words told to the viRali dancer by a friend of the wife of the land lord or by  a courtesan who was not taken to the chieftain.] 

There is an old taboo of beef-eating among Hindu castes in India.  While they do not consume or kill cattle directly, the farmers  dispose of the cattle useless in their farms away to outcaste  dalits. This is mentioned, for example, M. N. Srinivas, 1962, Caste  in India, New York, pg. 126 "I am not denying that cattle are regarded as in some sense sacred, but I doubt whether the belief is as powerful as it is claimed to be. I have already mentioned  that buffaloes are sacrificed to village goddesses. And in the case  of the cow, while the peasant does not want to kill the cow or bull  himself he does not seem to mind very much if someone else does the dirty job out of his sight." 

In the sangam poetry, land geography is divided into five landscapes. 
For an intro, 
http://en.wikipedia.org/wiki/Sangam_landscape 
The rich fertile wet lands are called Marutham. The characteristic  animal for this landscape is water buffalo, and the crop is paddy.  In this Marutham landscape, Indra is said to be its god known  for infidelity with women. Like Indra's affairs (e.g., with Ahalya  in the Ramayana), Marutham poems typically speak of land lords'  affairs with courtesans, and sangam poems often show the lady of the  house of the chieftain (probably a cross-cousin by arranged marriage) quarreling with her husband's procurer go-betweens such  as singers, washerwoman, entertainers, etc., NaRRiNai 310 is an important example in which a calf gets donated to the village minstrel. 


In the case of cows in Indian farms, excess male calves were culled especially in regions  where water resource was abundant and the main crop was rice paddy.  In these wet land farms, the plough and draft animals are male  buffaloes (called pOthu in Malayalam and Tamil), and the gender  ratio studies show that male buffaloes are more compared to females.  Much like in South East Asia, in the wet land paddys being prepared for transplantation, male buffaloes (instead of zebu oxen) are  valued as puddlers. On the other side, milch cows outnumber bulls or oxen in wet land districts, and male calves have to be culled. (A. Vaidyanathan, et al., Bovine sex and species ratio in India,  Current Anthropology, 23, 4, 1989). 

Next let us look at how naRRiNai 310 theme is repeating in the next 1500 years of Tamil literature. For example, in Appar, MaaNikkavaacakar, PaaNDikkOvai (iRaiyanAr akapporuL), Poyyaamozip Pulavar (12th century), Cokkappa Naavalar (17th century), Vaanchinathan who shot Ashe (Colector of Tinnevelly), Vellakaal Pa. Subramania Mudaliar, ...

Shiva conference at MFA, Houston



Shiva conference at Museum of Fine Arts, Houston, TX
December 1, 2012

Conference date: December 1, 2012
Conference location: Brown Auditorium, Museum of Fine Arts, Houston

10.00  Inauguration of the conference
 Hon'ble Harish Parvathaneni, Consul General of India

10:15 Unveiling of commissioned art works - Nanditha Parvathaneni

Lectures:

10:30 Keynote address - Shiva and the Goddess in Myth and Poetry
Dr. Indira Peterson,David B.Truman Professor of Asian Studies, Mount Holyoke College

11:15 Telling Tales: Shiva and His Stories at the Kailasanatha Temple in Kanchipuram
Dr. Padma Kaimal, professor, art and art history department, Colgate University

12:00 Chola Bronzes: Connoisseurship and Archival Research
Dr. Vidya Dehejia, the Barbara Stoler Miller Professor of Indian Art, Columbia University

Break for lunch at 1:00 p.m


2:15 Singing of Shiva and His Sacred Places: The Poems of the Tamil Saints
Dr. Indira Peterson, David B. Truman Professor of Asian Studies, Mount Holyoke College

3:00 Tracing the Dance of Shiva in Sculpture  
Dr. R.Nagaswamy - former director of archaeology,Tamil Nadu State; former vice-chancellor, Kanchipuram University

4:00  Overwhelming the Heart: Experiencing Shiva's Presence in Manikkavachakar's "Tiruvachakam"
Dr.Gardner Harris, visiting assistant professor,department of religion, Bucknell University

4:45 Closing remarks and end of the conference.





Introducing a new work on Hindu iconography:


Historicising Hinduism from Vedic period

T. SATYAMURTHY



For the iconoclasts of India, the idols that the conformists worship are the true images of the transcendental Absolute. There were many cults and many manifestations of gods, worshipped by various strata of the society. For several thousands of years, these groups interacted among themselves at various levels and exchanged ideas, including that of religion and gods. So much so, there appeared to happen a massive process, covering all over India, in which the gods were integrated and metamorphosed into one cult. As a result, we have a pan-Indian concept of manifestation of gods. It is very likely that many gods, with distinctive regional roots, were syncretised with gods from other regions.
In this scenario, the roots of the gods of the Hindu pantheon have to be obviously in the Vedas, being the oldest collection of hymns propitiating the divinity. In the initial stage of study of the significance of these idols, western scholars recorded their limitations in correlating the texts with sculptures. It was exactly 100 years ago, T. A. Gopinatha Rao, under the patronage of Travancore rulers, published Elements of Hindu Iconography and opened the way for proper interpretation of this most pressing desideratum.
Now, R. Nagaswamy has come out with an excellent book tracing the Vedic roots of Hindu iconography. Among the scores of books he has authored, this stands out to be the book where his extraordinary knowledge on India’s past is brilliantly revealed.
There are 33 articles in the collection of essays on various gods like Agni, Linga, Siva, Sakti, Muruga, Varaha, Rama, Krishna, and Balarama besides on the rituals associated with Agni and other miscellaneous subjects. In the opening article on Agni, he delineates the prime position accorded to him in the Vedic hymns. Relying on passages from various hymns and quoting them, he proposes that Agni is the embodiment of various manifestations including that of Siva and Vishnu. Later he proceeds to define the importance of the great purifying ceremony punyahavacanam. He cites the texts to show that the purification is not only for the body but for the space around human beings and the prayer includes prosperity and peace for all.
After a few articles akin to rituals, he goes on to explain how the ‘whole human body has always been praised as the temple and pulsating prana is the divine deva’. The temple is conceived in general parlance as the universe and Narayana-sukta, the mystical appendix to the Purusha-sukta of the Veda, played a vital role in the evolution of concepts relating to all temples.
In fact he effectively records that the Narayana-sukta bridged the gap between the Vedic texts and agama tradition. Again, the relevance of these agamas even today was demonstrated when it helped in retrieving the lost idol of Nataraja from overseas and shows the authority of these texts. He deals in detail how these texts helped him during the trial in a London court in establishing the origin of the icon in general and the ownership of it to the temple in particular.
The article on Linga contests the theory that the worship of Linga as Siva originated from the worship of phallus. He shows that there are many aspects to the worship of Linga. In fact Vedic passages reflect the inseparable unity of Siva and Vishnu in Linga. Nammalavar’s quotations are shown as authority to prove that clearly demarcated cult of Siva and Vishnu were not professed by great saints. They always considered them as the manifestations of the supreme god.
In a classic article on Sandhya Vandanam, he concludes that the nature of the dance of Siva is the dance of Surya who performs the samasta samhara by entering the solar orbit and it is adoration of Sun in all his Vedantic form that flowers into the dance of Siva.
The article on the meaning of Khandariya Mahadeva Temple at Khajuraho in Madhya Pradesh is an example of the author’s scholarship in interpreting the great Indian temples through the texts and other temples such as Lakshmana, Jaina, and Yogini temples at that place. He declares that the temple belongs to the Bhairava cult. The representation of matrikas in the base of the temple, according to him, represents syllables and the adhishthana of the temple is the Vidyapitha. For young research scholars, the documentation of various evidences is the methodology of the analytical study of Indian art.
Sakti worship
Then he delves into the Tamil literature, by critically analysing the position of various gods in the ancient and medieval Tamil works, beginning with the Sakti worship in Tamil Nadu and moves on the status of Murgan, and Balarama. To the critics on the role of Ramayana in Tamil Country, he has proved emphatically that it was not a new introduction, but is known even from the Tamil Sangam literature and Tamil epic Silapadikaram. The work on Vedic traditions in the Tamil epic Manimekalai is another example of his understanding of both Tamil and Sanskrit works.
To encapsulate, this monograph highlights the role of religion in understanding India’s past. It is also apparent that one has to undertake relentless research to co-relate the literature of the past with the present.

VEDIC ROOTS OF HINDU ICONOGRAPHY: R. Nagaswamy; Kaveri Books, 4832/24, Ansari Road, New Delhi-110002. Rs. 2500.
http://www.thehindu.com/arts/books/historicising-hinduism-from-vedic-period/article3999762.ece

மணற்கேணி அழைப்பு - தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் (1961-2011)

மணற்கேணி இதழாசிரியர் எழுத்தாளர் ரவிக்குமார் புதுச்சேரியில் அரிய நிகழ்ச்சி - தமிழ்த் தொல்லியல் தொடர்பானது - வரும் சனிக்கிழமை ஒருங்கிணைத்து நடத்துகிறார். இத்துறையில் ஆர்வமுடையவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி!
Dr. நா. கணேசன்

http://3.bp.blogspot.com/-cbRnKFftC6Q/UK0Yrio1sHI/AAAAAAAABFE/17WB0Wmzl9A/s1600/Tamil+Tholliyal.jpg

எழுத்தாளர் ரவிகுமார் தன் நிறப்பிரிகை வலைப்பதிவில் வரும் சனிக்கிழமை தமிழர் தொல்லாய்வுகள் - கடந்த 50 ஆண்டுகளில் சாதனை  பற்றி புதுச்சேரியில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சி - தமிழகத் தொல்லியல் (1961-2011) பற்றி எழுதியுள்ளார்.
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் (1961 - 2011)

நண்பர் ரவிகுமார் (ஆசிரியர், மணற்கேணி) பெரு முயற்சி எடுத்து  நிகழ்த்தும் இந் நிகழ்ச்சிகள்  தமிழர் பெருமையைக் கூறுவன. திரளாக நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

செந்தமிழ் (CTamil, பாரிஸ் பல்கலை) குழுவில் எழுதிய மடலிணைத்துள்ளேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவோர் விரிவாக அது பற்றி எழுத வேண்டுகிறேன். நன்றி.

நா. கணேசன்

---------- Forwarded message ----------
From: N. Ganesan <naa.ganesan@gmail.com>
Date: Thu, Nov 22, 2012 at 6:14 AM
Subject:
To: ctamil@services.cnrs.fr


Dear Ravikumar,

I saw in your blog about the important function you're organizing
celebrating 50 years of the Tamil archaeology department.

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் (1961 - 20110

Congratulations for organizing the event with prominent
experts of the field. I can well understand the passion, resources - time & money -
needed to do functions like these. Hope Tamil public and politicians
understand what is happening in Tamil and Dravidology research
and support these efforts with their presence, and money.

If possible, please put the videos in http://youtube.com so the
scholars worldwide can watch them. And, also a record for posterity.

Anbudan, & best wishes,
N. Ganesan






அழகன்குளம் - தமிழ் எண்கணித சரித்திரத்திற்கு ஓர் கலங்கரை விளக்கு

CHENNAI, 28/12/2011: Numeral 408 incised on pottery from Alagankulam (1st century C.E.) . Photo: Tamilnadu State Department of Archaeology


AzhakankuLam (maruGkUr paTTinam of Sangam era) pottery inscription - Numeral 804 (NOT 408!) ~ N. Ganesan (Photo published in The Hindu from Tamil Nadu State Dept. of Archaeology.).

முழு ஆய்வுக் கட்டுரையும், வல்லமை இணைய இதழில் வெளியாகியுள்ளது:

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்: 
http://www.vallamai.com/literature/articles/29153/

---------------------------

காவேரிப் பூம்பட்டினம் போலவே ’வையைப் பூம்பட்டினம்’ சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அகநானூறு, நற்றிணை போன்ற பழைய நூல்கள் நமக்களிக்கும் செய்திகளால் வையை நதி கடலுள் சங்கமிக்கும் மருங்கூர்ப்பட்டினமாக அது இருக்க வேண்டும். இன்று அழகன்குளம் அகழாய்வுகள் அளிக்கும் தொல்லியல் சான்றுகளால்  மருங்கையின் இடமும், அதன் வணிகவளமும் வேளாண்வளமும் நன்கு புலனாகி வருகிறது. இன்று வைகை வறண்டு கடலில் கலப்பதில்லை, கடலும் அழகன்குளத்தில் இருந்து உள்வாங்கிவிட்டது. ரோமானியக் கப்பல்கள் எகிப்தில் இருந்து வையைப்பூம்பட்டினத்துக்கு வந்ததைச் சைத்ரீகர் ஒருவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்து வரைந்து நமக்களித்துள்ளார். மருங்கையின் புகழ்பாட என்றுமுள தொல்லியல் சான்றுகளாய் ரோமானியக் கப்பல் சித்திரமும், எண்கணித சரிதமும்  கிடைத்துவிட்டன!

புகாரின் கீர்த்தி பாடும் பட்டினப்பாலைக்குப் பின்னர் சமண சமயஞ் சார்ந்த கோவலன் கதையாகத் தமிழின் முதல் நாவல் பூம்புகார்ப் பட்டினத்தில் தொடங்குகிறது. நம் முத்தமிழ்த் தேசியக் காப்பியம் படைத்த இளங்கோ அடிகள் காவேரிப் பட்டினத்துக்கு  தன் நாவலால் அழியாப் புகழ் ஈந்தார். சிரமண சமயத்தவர் எழுத்து மாத்திரம் இல்லாமல், எண்ணையும் இந்தியர்க்குக் கற்பித்தார்கள். அதனால் தான் வள்ளுவர்  ”எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும் ஔவை ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் பகுத்தனர்.

இன்றும் 4-9 தமிழெண்களின் வடிவங்களில் வடமொழி எண்ணுப்பெயர்களின்  முதல் அட்சரங்கள் இருப்பதைக் காண்கிறோம். கோவலன் குடும்பம் போன்ற வணிகக் குடியினர்க்கு எண் கணக்கு முக்கியம் அல்லவா? இம் மரபு கற்பித்தவர் யார்? வடநாட்டுக் குகைக் கல்வெட்டுக்களில் உள்ள எண்களைச் சிரமண சமயத்தவர் மருங்கைப் பட்டினம்  போன்ற நகரங்களில் கொணர்ந்து தமிழர்க்குத் தந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் அறிவிக்கின்றன. தமிழரின் எண்கணித வரலாற்றுக்கு முக்கியச் சாட்சியாக வையைப் பூம்பட்டினமான இராமேஶ்வரம் அருகில் உள்ள அழகன்குளம் (சங்ககால மருங்கை) பானை ஓடு சான்றாக விளங்குகிறது.

எண்கணிதத் தேற்றத்தில் (Number Theory) உலகத்தில் வியப்பான முடிபுகளை அளித்தவர் ஈரோட்டில் அவதரித்த கணிதமேதை ராமானுஜன். அவர் நினைவாகச் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்) பானை ஓட்டில் உள்ள பெரிய எண்ணை சென்ற ஆண்டு விளக்கியுள்ளார் திருமிகு. ஐராவதம் மகாதேவன் அவர்கள்:
மருங்கூர்ப் பட்டினத்துப் பானை ஓட்டில் உள்ளது 804 எண் ஆகும் என்பது என் முடிபு. ஐராவதம் மகாதேவனார் குறிப்பிட்டது போல இந்த எண் 408 அன்று. இதனை அறிந்துகொள்ளச் சமணர்களின் மனிப்பிரவாள நூல் ஆகிய ஸ்ரீபுராணம் பயிலலாம். ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு சிறுமியரை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதைக் காண்கிறோம். ஆக, சங்ககால மருங்கையின் பானை ஓட்டு எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும்போது ‘நான்கு தலையிட்ட எட்டின் நூறு’ என்பது பாரத எண்கணிதத்தின் வாமகதி மரபு. ஆனால், மருங்கூர்ப் பட்டினப் பானை ஓட்டின் எண்ணின் மதிப்பு 804 தான், 408 இல்லை. இதனைப் பரவலாக, பிராமிக் கல்வெட்டுகளில் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் காணலாகிறது. ஈரோட்டுக்கருகே உள்ள விஜயமங்கலம் கொங்குவேளிர் பெருங்கதையை ரிஷபநாத தீர்த்தங்கரர் கோவிலில் அரங்கேற்றிய கல்வெட்டு இருக்கிறது. நாமக்கல் நாமகிரித் தாயாரும் விசயமங்கல ஆதிநாதரும் சேர்ந்தருள மேதை ராமானுஜனுக்கு வாய்த்தது தமிழரின் கணிதத் திறனை உலகறியத் துணைசெய்தன போலும்.

மருங்கைப் பானை ஓட்டு எண்மதிப்பு 804 - என்னும் பொருளில் ‘வல்லமை’ இணைய இதழில் இரண்டொரு நாளில் விரிவாகத் தருகிறேன். தமிழில் உள்ள எண்கணித வரலாற்றுக்கு கலங்கரை விளக்கமாய் அமைந்துள்ள மருங்கூர்ப் பட்டினம் தொல்லியல் சான்றை அறிமுகம் செய்துள்ள திருமிகு ஐ. மகாதேவனார்க்கு நன்றி.

அன்புடன்,
நா. கணேசன்

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்: 
http://www.vallamai.com/literature/articles/29153/ 


Ancient numbers in the land of Ramanujan


    IRAVATHAM MAHADEVAN

    M. V. BHASKAR

    CHENNAI, 28/12/2011: Numeral 408 incised on pottery from Alagankulam (1st century C.E.) . Photo: Tamilnadu State Department of Archaeology


The oldest stone inscription featuring a numeral is the Tamil-Brahmi cave inscription from Tondur
How were numerals written in ancient times in the Tamil country, the land of Srinivasa Ramanujan, ‘The Man Who Knew Infinity'?
Literary sources in Tamil mention numbers only in words.
However, we do have ancient literary references specifically mentioning eN (‘numeral') as distinguished from ezhuttu (‘letter of the alphabet,' for example, Tolkappiyam 655.4, Tirukkural 392).
But as palm leaf manuscripts decay with time and hardly last for more than 200 years, we have to turn to durable stone or pottery inscriptions to know what the ancient Tamil numerals looked like. We illustrate two of them here, one from each class (Figs. 1 & 2).
The oldest stone inscription featuring a numeral is the Tamil-Brahmi cave inscription from Tondur, near Gingee, in Villupuram district, assigned to about the 3rd century C.E. (Fig. 1). The numeral 3 engraved at the end of a short two-line inscription in the cave is represented by three horizontal parallel lines.
The inscription records that the village of Agalur gifted three stone beds in the cave chiselled by Mosi.
The gift was made to the Jaina monks resident in the cave. The village still exists with the same name Agalur, near Tondur, both of which still have sizeable Jaina populations. The numeral 3 has the same form as in contemporary Prakrit inscriptions in the Brahmi script in North India.

POTTERY INSCRIPTION

A well-preserved pottery inscription from Alagankulam near Rameswaram has only the numeral incised in fairly large size (Fig. 2). The inscription is dated to the 1st or 2nd century C.E.
The number is read 408, from right to left, following the ancient convention of reading the digits from the right (ankaanaam vaamato gatih). The first digit at right looking like the cross is the symbol for 4.
It is followed by the symbol for 100 (resembling the Brahmi letter sa) and the last symbol at left is 8, incised in reversed direction.

INTERESTING

As there is no accompanying text, we do not know the significance of the number. The find is still interesting for the absence of the place-value system. The convention of using symbols for 10, 100, and 1000 in expressing the higher numerals was current in Tamil Nadu until the advent of printing and the adoption of the international form of Indian numerals with place-value system.
The pottery inscription is also good evidence for widespread literacy, including numeracy, in the ancient Tamil country.

Diacritic for writing short E and O in Grantha script

Malayalam and Tamil scripts differ from Grantha script in representing short E and O vowels. Hence, we cannot use E and O vowels or the corresponding vowel signs from either Malayalam or Tamil script. Note that Grantha long E and O are Tamil or Malayalam short E and O, whereas Grantha short E and O vowel representation employs a diacritic symbol [1].

This has been explained by many specialists on Grantha. For example, Sriramana Sharma's
proposal on Grantha script (L2/09-372)

  09372-sharma-puLLi-dot-for-E-O_Page_3 09372-sharma-puLLi-dot-for-E-O_Page_1 09372-sharma-puLLi-dot-for-E-O_Page_2

Reference [1]: “PuLLi takes the form of a dot above or in the upper part of the akSara. In addition to this normal virama function, puLLi is also used with the vowels e and o in order to mark them as short: in contrast to Sanskrit and most Middle-Indo-Aryan dialects, the Dravidian languages have short as well as long e and o phonemes.” In the Brahmi encoding, puLLi function and its shape “dot” to reduce long /e/ and /o/ to short vowels is allowed in Unicode (S. Baums and A. Glass, L2/07-342, pg. 8, L2/07-342).

It should be noted that Tamil E and O differ from the older Grantha E and O because of the reform introduced by a Jesuit priest from Italy. "The famous Jesuit Beschi (1704-1774) is the author of a great improvement in Tamil orthography – the distinction between long and short e & o.” (pg. 37A. C. Burnell, Elements of South Indian Paleography, 1874).


Table comparing Grantha SHORT E and O vs. Tamil  and Devanagari SHORT E and O.
Note that the vowels and vowel signs are quite different.


11011eo

சீபழமி (< ஸ்ரீபழமி) கல்வெட்டு (கி.பி. 400) & சிந்து கொல்லி/கொற்றி




தமிழ்க் கலாசாரமும், சிந்து சமவெளியும் – கோவை பல்கலைகளில் சிறப்புச் சொற்பொழிவுகள்

http://www.vallamai.com/news-cat/special-news/22855/
--------------------------------------------------------------------------------------- 
பாரதியார் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் 
தமிழ்த்துறை
சிறப்புச் சொற்பொழிவு

பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அமெரிக்க நாசா விண்வெளி  விஞ்ஞானியும், தமிழுலகில் போற்றத்தக்க அறிஞருமான முனைவர் நாகமாணிக்கம் கணேசன்  அவர்கள், 
இரும்பூழிக்காலத் தமிழகமும் சிந்து சமவெளித் தொடர்புகளும் - 
இடக்கல் கல்வெட்டில் கொல்லிப்பாவை/கொற்றவை  சீபழமி

என்ற தலைப்பில்  2012, ஜுலை மாதம் 4 ஆம் தேதி  புதன்கிழமை காலை 10.30  மணியளவில் தமிழ்த்துறைக் கருத்தரங்க அறையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த  வருகைதர உள்ளார்கள். 
இச்சிறப்புச் சொற்பொழிவிற்கு மாண்பமை துணைவேந்தர் 
முனைவர் சி. சுவாமிநாதன் அவர்கள் (பாரதியார் பல்கலைக்கழகம், கோவை)  தலைமையேற்க இசைந்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் 
முனைவர் கி. நாச்சிமுத்து அவர்கள்
(தலைவர், இந்திய மொழிகள் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி - 110 067)
அறிமுக உரை நிகழ்த்தவும்

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்கள் 
(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம்)
வாழ்த்துரை வழங்கவும்  இசைந்துள்ளார்கள்.

தாங்கள் இச்சொற்பொழிவில்  பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன்  வேண்டுகிறோம். 
--------------------------------------------------------------------------------------------------------

கற்பகம் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
தமிழ்த்துறை 

சிறப்புச் சொற்பொழிவு

கற்பகம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அமெரிக்க நாசா  விண்வெளி 
விஞ்ஞானியும், தமிழுலகில் போற்றத்தக்க அறிஞருமான முனைவர் நாகமாணிக்கம் கணேசன்  அவர்கள்,

செம்பூழிக் காலச் சிந்து சமவெளியில் கொற்றவை: 
சிவபெருமான் (மகரவிடங்கர்) வழிபாட்டின் தோற்றம்

என்ற தலைப்பில்  2012, ஜுலை மாதம் 5 ஆம் தேதி  வியாழக்கிழமை மதியம் 2:00 மணியளவில் தமிழ்த்துறைக் கருத்தரங்க அறையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த வருகைதர உள்ளார்கள். 
இச்சிறப்புச் சொற்பொழிவிற்கு மாண்பமை வேந்தர் 
முனைவர் இரா. வசந்தகுமார் அவர்கள்
(கற்பகம் பல்கலைக்கழகம், கோவை)
தலைமையேற்க இசைந்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் 
முனைவர் கி. நாச்சிமுத்து அவர்கள்
(தலைவர், இந்திய மொழிகள் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி - 110 067)
அறிமுக உரை நிகழ்த்தவும்

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்கள் 
(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம்)
வாழ்த்துரை வழங்கவும்  இசைந்துள்ளார்கள்.

தாங்கள் இச்சொற்பொழிவில்  பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன்  வேண்டுகிறோம். 
--------------------------------------------------------------------------------------------------------

வல்லமை மின்னிதழில் செய்தி:

http://www.vallamai.com/news-cat/special-news/22855/

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012

உடன்பிறப்பே,


பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூறுகளையும், ஆதார மற்ற குற்றச்சாட்டுகளையும் சொல்லும்போது உரிய பதில் அளிப்பதற்கும் பேரவைத் தலைவரோ, ஆளுங்கட்சியோ வாய்ப்பு அளிக்காத நிலையில், ஏற்கனவே திட்ட மிட்டபடி, அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பேசுமாறு  பேரவைத் தலைவரே 19-4-2012 அன்று அழைக்கிறார்.   உடனே அவர் எழுந்து,  அரசைப் புகழோ புகழ் என்று  புகழ்ந்து பேச, அதைத் தொடர்ந்து   முதலமைச்சர் ஜெயலலிதா  எழுந்து,  ஒரு நீண்ட அறிக்கையினைப் படித்ததோடு, அதனைச் செய்தியாளர் களுக்கும் அளித்துள்ளார்கள்.   அந்த நீண்ட அறிக்கை முழுவதும்  தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நான் அடுக்கடுக்கான  ஆதாரங்களோடு  எழுதிய தற்கும், ஜெயலலிதா தெரி வித்த பதில்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து எழுதியதற்கும் விளக்கம் என்ற பெயரால் எழுதிப் படித்த “சமாளிப்புகள்” தானே தவிர அடிப்படையில்  அவற்றில்  எதுவும் உண்மை இல்லை.

அரசு விழாவில் ஜெயலலிதா பேசும்போது,  தமிழ் மொழியை உலகம் முழுவதும்  பரப்பு வதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி னோம் என்று சொன்னதால்,  தி.மு. கழக ஆட்சிக் காலத்திலும் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினோமே,  அதுமட்டும்  தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற் காக அல்லவா? என்று கேட்டிருந்தேன். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தெரியாத ஜெயலலிதா,  கோவையில் நடைபெற்ற மாநாடு கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட “தன்னல தம்பட்ட மாநாடு” என்றும்  பேரவையிலே  கூறியிருக்கிறார்.

பொதுவாக பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போதும், யாரோ ஒரு உறுப்பினர் ஒரு ஐயத்தை எழுப்பி அதற்குப் பதில் அளிக்கின்ற போதும் குற்றச்சாட்டுகள் இருக்கக் கூடாது என்பது மரபு. மரபுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கு மரபாவது, மண்ணாங்கட்டியாவது? இருந்தாலும் முதல் அமைச்சர், பேரவையிலேயே படித்திருக்கிறாரே;  நான் விளக்கம் தராமல் இருக்கலாமா?    அம்மையார் ஜெயலலிதா நடத்திய தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலே பாடிய வாழ்த்துப் பாடலிலேயே  ஜெயலலிதா பெயரை  பல இடங்களிலே பாராட்டிக் குறிப்பிட்டே பாடப் பட்டது.   ஆனால் கழக அரசு நடத்திய கோவை மாநாட்டில்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர, அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது.  தஞ்சையில் அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த  இலங்கைத் தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி உட்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படவே இல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேஇல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலி யஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேமன் ஆகிய வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம்  வருகை தந்து பாராட்டினார்கள். முன்வரிசையிலே அமர்ந்திருந்தார் கள்.  ஆனால் ஜெயலலிதா, முன் வரிசையிலே என் குடும்பத்தினரும்,  தி.மு.க.வைச் சேர்ந்த “தலை சிறந்த தமிழறிஞர்களும்” அமர்ந்திருந்ததாக கிண்டல் செய்துள்ளார்.   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசையிலே அமர்வதே பழித்துப் பேசப்படக்கூடிய பாவகரமான ஒன்றா? தி.மு.க.வில்  தமிழறிஞர்களே கிடையாதா?  அ.தி.மு.க.விலே தான் தலை சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் இருக்கிறார் களா?   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசை யிலே அமரலாமா என்று கேட்கின்ற ஜெயலலிதா  சட்டப்பேரவையிலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன் உடன்பிறவாச் சகோதரியை அழைத்து வந்து மரபுக்கு மாறாக  துணை சபாநாயகர் அமர வேண்டிய இடத்திலே உட்கார வைத்தாரே,  அது எந்த வகை யிலே சரியானது? ஜெயலலிதாவே  பேரவைத் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாரே;  அது எவ்வகை மரபு என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேசிய ஜெயலலிதா பௌர் ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ,  அந்த நட்சத்திரத்தின் பெயர்தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று கூறியதையொட்டி,  சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர  மற்ற மாதங்கள் எல்லாம்  நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே  என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல சமாளிக்கப் பார்த்திருக்கிறார். உதாரணமாக  விசாகம் என்பது வைகாசியாகவும்  -  அனுஷம் என்பது  ஆனியாகவும்  - பூராடம் என்பது ஆடியாகவும்  -  திருவோணம்  என்பது ஆவணியாகவும்  -   மிருகசீர்ஷம் என்பது  மார்கழியாகவும் -  பூசம் என்பது  தையாகவும் - மகம் என்பது  மாசி மாதமாகவும் - உத்திரம் என்பது பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லி யிருக்கிறார்.

தமிழறிஞர்கள்  இந்த மேதா விலாச விளக்கத்தை  ஏற்க  முடிந்தால் சரி!   சென்னப்பட்டி னம் சென்னை என்று மருவியதைப் போலத்தான் இந்தச் சொற்கள் எல்லாம் மாறிவிட்டன என்கிறார்.  நன்றாகவே  காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்! நான் மேலும் கேட்கிறேன்;  நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம்  திரிந்துதான் மாதங்களின் பெயர்களாக உள்ளன என்று கூறும் ஜெயலலிதா அவர்களே,  இந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்தன என்றால்,  நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே உச்சரிக்கிறார்கள்?   நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

தொல்காப்பியர் “திங்கள் முன்வரின் இக்கே சாரியை”  -  இகர ஈற்று மாதப் பெயர்கள்  (ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி) -  “இக்கு” சாரியை பெறும் என்றும்  “திங்களும்  நாளும்  முந்து கிளந்தன்ன”  ஐகார ஈற்று மாதப் பெயர்கள் (சித்திரை, கார்த்திகை, தை) முன் சொன்னவாறு  இக்கு சாரியை பெறும் என்றும் கூறியுள்ளாரே, அப்படியென் றால்  இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்திலேயே திரிந்து விட்டன என்று ஜெயலலிதா சொல்கிறாரா?

அதுபோலவே சங்க இலக்கியங்களில் எல்லாம் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவே, அப்படியென்றால்  சங்க இலக்கியங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா சொல்வதைப்போல நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இத்தகைய மாதப் பெயர்களாக திரிந்து விட்டனவா?

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரிலே  சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய  ஒரு கட்டுரையை அம்மையார் ஜெயலலிதா  மேற்கோள் காட்டிப் பேசியிருந்த  காரணத்தால்,  அதே கட்டுரையின்  முதல் பகுதியில்,  அதே சிறுவை நச்சினார்க்கினியன்  தை மாதம்  பற்றி  எழுதியதை அப்படியே வரி பிறழாமல்  குறிப்பாக   “நாம் தைத் திங்களையே ஆண்டின்  முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்து வோம்”  என்று அவர் எழுதியிருக்கிறார் என்று நான் பதிலாகத் தந்திருந்தேன்.  தற்போது அம்மையார் முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன்    என்று தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை என்று அப்படியே புறமுதுகிட்டுள்ளார்.   நச்சினார்க்கினியன் பற்றி நூற்றாண்டு விழா மண்டபத்திலே முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டாரா இல்லையா? அதே நச்சினார்க் கினியன்  தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாகச் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா?  அதைத் தான்  தி.மு. கழக அரசு,  தமிழறிஞர்கள்  சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு சட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதே தவிர தானாக இட்டுக்கட்டி எதையும் செய்துவிடவில்லை.

“வாழ்வியற் களஞ்சியம்”  என்ற  நூலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றுதான் குறிப் பிடப்பட்டிருக்கிறதே தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்பட வில்லை என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா!   என்ன செய்வது?   ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் முதலமைச்சராக வருவார்கள், அவர்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரும் என்பது அந்த நூலாசிரியருக்குத் தெரியவில்லை போலும்!   ஆனால் நான் இந்தப் பதிலை எழுதும்போது  கொட்டை எழுத்துக்களில், தமிழ் ஆண்டின் தொடக்கமே  தை  முதல்  நாள் என்றும்,  அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக் காட்டியிருக்கிறேன்.     இந்தப் பொருள் புரியாமல்  தை பிறந்தால் வழி பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று ஜெயலலிதா பேரவையில் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.

அடுத்து  ஜெயலலிதா “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” என்ற நூலினை  மேற் கோள் காட்டி,  அந்த நூலில்  தமிழாண்டின்  தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்ப தாகக் கூறியிருக்கிறார்  திரு. கருணாநிதி,  அந்த நூலில்  113வது பக்கத்தில்  “இச்செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்றிருப்பதை தனக்கு வசதியாக  திரு. கருணாநிதி மறைத்துவிட்டார்” என்று  பேரவையிலே  படித்துக் காட்டியிருக்கிறார்.    தமிழக அரசினால் -  தமிழக அரசின் செலவில் - முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணிந் துரையுடன் வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொரு வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவ ராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொருள் கூறும்போது,  அதை எந்தப் புத்தகத்திலிருந்து  எடுத்தாண்டு இருக்கிறோம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதிலே என்ன தவறு? இன்னும் சொல்லப்போனால்,  அம்மையார்  அரை வாக்கியத்தைத்தான் எழுதியுள்ளார்.  முழு வாக்கியத்தையும் நான் கூறுகிறேன்.  அதாவது  “திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவர் ஆண்டு அல்லது  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப் பட்டது”  என்று உள்ளது. ஆக  நான் கூறியதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக புலவர் இறைக் குருவனார் அவர்களும் தை மாதம்  தமிழாண்டின் தொடக்க மாதம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே  அம்மையார் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இறைக்குருவனார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனையை ஏற்றுத்தான் இந்தச் சட்டத்தை நான் பிறப்பித்தேன் என்பது உறுதியாகிறதா; அல்லவா? இறைக்குருவனார் கருத்தை யேற்றுத்தானே அந்த நூலில் அந்தப் பொருளை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.   அந்த நூலை முழுவதும் படித்து விட்டுத்தானே  முதலமைச்சர்  ஜெயலலிதா அம்மையார் அந்நூலுக்கு  அணிந்துரை கொடுத்தார்?  இப்போது அவரே அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளலாமா?  தமிழ்நாட்டில் இருக்கின்ற  தமிழ் அறிஞர்களே, புலவர்களே,  சான்றோர்களே  அம்மையார் வைத்த வாதம் சரியா? நான் தருகின்ற விளக்கம் சரியா? என்பதை  சமன்  செய்து சீர்தூக்கும் கோல் போல் இருந்து நீங்களே  பதில்   கூறுங்கள்.

அடுத்து  முதலமைச்சர் ஜெயலலிதா மிகத் தெளிவாக ஒரு ஐயத்தைக் கேட்டிருக்கிறார்.   1963ஆம் ஆண்டு  நான் சட்டப்பேரவையில் உரையாற்றியதைக் குறிப்பிட்டு, அப்போதே திருவள்ளுவர் தை மாதத்தில்தான் பிறந்தார் என்று கூறி ஏன் விடுமுறை நாளாக அந்த நாளை அறிவிக்குமாறு கேட்கவில்லை என்று கேட்டுள்ளார்.   தமிழறிஞர்களும், புலவர்களும்  என்னிடம் 1963ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தக் கோரிக்கையைச் சொல்லியிருப்பார்களானால் நான் அப்போதே அதைக் கூறியிருக்க முடியும்.   அவர்களிடம் இதைக் கேட்டால், 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா மறைந்து நீ முதலமைச்சராக ஆவாய் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பார்கள்? இந்தக் கேள்விக்குத்தான் நான் மயிலை கூட்டத்திலேயே தெளிவாக; “சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள்.  பிறகுதான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று,  சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது;  பூமிதான் தன்னைத் தானே சுற்றிக்  கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என்று கூறியபிறகு அதை ஏற்றுக் கொண்டோம். அதைப்போலவே  பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது.  பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம். ஏன் இதை முன்பே சொல்ல வில்லை என்றா கேட்க முடியும்?”  என்று குறிப்பிட்டேன்.

அதுமாத்திரமல்ல; இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல.    “தினமணி” நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட கடிதம் ஒன்றை, 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று எழுதியிருந்தார்.   எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம்.    முடிவெடுத்தவர்கள் யார் என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில்தான் கழக ஆட்சியில் முடிவெடுக் கப்பட்டது.  இதிலே உள்ள முக்கிய குறையே;  தமிழர்களுக்கு என்று முறையான வரலாறு இல்லை என்பதுதான்.  இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும்  உணரப்பட்டது.
பொறியாளர் வே. வரதராசன் அவர்கள் எழுதிய “தமிழர் நாகரீகம்” என்ற நூலில் “1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர் களும், புலவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர்.  திருவள்ளு வர் காலம் கி.மு. 31  என்றும் அதையே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் (பொங்கல் திருநாளில்) எனவும் முடிவெடுத்தனர்” என்றுள்ளது.
1937ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் - தந்தை பெரியார், உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,  தமிழ்த்  தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன்,  ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில்  - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்  என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
9-5-1971இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற  தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமது “விடுதலை” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் -  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.   

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் விடுத்துள்ள அறிக்கையில்  நான் முறையாக எதையும் ஆய்வு செய்யாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்டத்தை இயற்றினேன் என்று கூறியிருக் கிறார்.   தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்  தமிழக வரலாறு ஒருநாள்  நிச்சயமாக மெய்ப்பிக்கும்!   தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்  தமிழக வரலாறு ஒருநாள்  நிச்சயமாக மெய்ப்பிக்கும்!   தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்கிரமம்! அதற்குப் பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும்  புல்லர்கள் சிலர் புயம் தட்டிப் புறப்படுவதும் அராஜகம் என்பதை உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர்!

அன்புள்ள,
    மு.க.




திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்


Navalar Somasundara Bharathiyar (with Chozhavandan R. Srinivasavaradan and Madurai V. G. Srinivasan. Photo courtesy: R. A. Padmanabhan, Chithira Bharathi, Publisher: Pollachi N. Mahalingam).

In Tamil Nadu, there is a raging controversy between Jayalalitha and M. Karunanidhi about Tiruvalluvar AaNDu. I wrote a piece in Vallamai e-zine giving some details on who gave the Thai Pongal date:
http://www.vallamai.com/literature/articles/19155/
Subsequently it was printed in Tamil Nadu in Viduthalai, a magzaine started by Periyar EVR, and Kalaignar M. Karunanidhi read the essay and quoted it in Kalaignar TV & he mentioned about it also in his daily letter to UdanpiRappu in Murasoli paper (22-April-2012).

After the Vallamai article, "TiruvaLLuvar tirunAL tanta Naavalar Somasundara Bharathiyar" I wrote another in the series for Vadakkuvaasal, a print magazine from Delhi, suggesting a compromise: Tiruvalluvar TirunaaL on Pongal day, and Tolkaappiyar TirunaaL on Chitthirai 1 (traditional Tamil New Year day). Note that I mention extensively Jaina contributions to Tamil, and the North-South megalithic expansion into sites like KoDumaNam & Porunthal (Kongu), Adichanalluur (Porunai) etc.,

Next article I'm writing is about the Tamil month name, தை (tai) which is a word of pure Tamil/Dravidian origins. and is not a Sanskrit word as evidenced from Sangam literature.

Any learned comments welcome,
N. Ganesan


திருவள்ளுவர் பிறந்தநாள் தேர்வில் நாவலர் பாரதியார் பங்கு: தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களில் முதல்வர் சென்னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 – 1959). நாவலர் பாரதியாரும், பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் பள்ளித் தோழர்களாய் எட்டயபுரத்தில் வளர்ந்தபோது இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை ஈழப்புலவர் வழங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரிடம் தூத்துக்குடியில் பணிபுரிந்து காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து சொற்பொழிவு நிகழ்த்தியவர் நாவலர். நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஆனால், இராஜாஜி அரசாங்கம் 1937-ல் பள்ளிகளில் இந்தியைப் புகுத்தியபோது காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைவரானார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவருக்கு ஆசிரியர். எனவே, தனித்தமிழில் அழகிய நூல்கள் பல எழுதினார், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குப் புத்துரையும், கம்பன் திறனாய்விலும் புகழ்பெற்றவர். அறிஞர் அண்ணா கம்பன் காப்பியத்தை எரிக்க வேண்டும் என்றபோது அதை மறுதலித்து சேலத்தில் வாதாடியவர் நாவலரே. ’கம்பனிற் சிறந்த கவி தமிழில் இல்லை’ என்ற கொள்கையுடைய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதி ஆவார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944-ல் நாவலர் என்ற பட்டத்தை வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் முனைவர் சோமசுந்தர பாரதி ஒருவரே.
திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது:
“உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.”
”மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. 1935-ல் இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப் பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான்.” என தமிழறிஞர்களைப் பாராட்டி விருதளித்த 2012 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வரலாறு.காம், தமிழ்ஹிந்து (பால. கௌதமன்) வானியல், பழந்தமிழ், கல்வெட்டுக்கள் துணையுடன் இணையதளங்களில் எது தமிழ்ப் புத்தாண்டு? என்ற வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ”வள்ளுவர் பிறந்த மாதமாக மறைமலையடிகள் குறித்த வைகாசியை, திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் கொண்டாடிய வைகாசியை, பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு அறிவித்த வைகாசியை, அண்ணா உடன்பட்ட வைகாசியைக் கருணாநிதி மாற்றி, திருவள்ளுவர் தினமாகத் தை இரண்டாம் நாளை 1971-ஆம் ஆண்டு அறிவித்தார். கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர் என மறைமலையடிகள் சொல்லிய ஆண்டை மாற்றாத கருணாநிதி, அடிகள் குறித்த வைகாசி மாதத்தை மட்டும் மாற்றித் தை என அறிவித்தார்.” (சாமி. தியாகராசன், திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவர் கட்டுரை, தினமணி, 14 ஏப்ரல் 2012).[1]
ஆனால், தைப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள் 20-ஆம் நூற்றாண்டுத் தேர்வில் நாவலர் பாரதியார் போன்ற தனித்தமிழ் இயக்கப் புலவர்களின் பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் மறைமலை அடிகள் தந்தார். 1935-ல் அடிகள் திருவள்ளுவர் திருநாள் கழக மாநாட்டின் தமது தலைமை உரையில் “கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” எனக் குறிப்பிடுகின்றார். “தமிழர்க்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டும் என்றும், அவ்வாண்டு முறை உலகம் போற்றும் ஒப்பற்ற மறை நூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்று ஆராய்ந்த அடிகள் அதன் காலத்தை கி.மு. 31 எனத் தீர்மானித்தார். திருவள்ளுவர் திருநாள் வைகாசித்திங்கள் பனை (அனுஷம்) நாள் எனவும் திடப்படுத்தினார்” (அடிகளின் மகன் எழுதிய மறைமலை அடிகள் வரலாறு). இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னர் 1937-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் அடிகளின் மாணவர் ஆன நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பிறந்தநாளையும், தொடராண்டின் முதல்நாளையும் தைப் பொங்கலுக்கு மாற்றுகிறார் என்பது இருக்கும் சான்றாதாரங்களால் தெரிய வருகிறது. நாவலர் மறைவின் பின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் பிறந்தநாளாகத் தை இரண்டாம் நாள் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய புலவர்களுள் தலைமை வகித்தவராய் விளங்குகின்றார்.
திருவள்ளுவர் பிறந்தநாள், திருவள்ளுவர் ஆண்டாகத் தைப் பொங்கல் ஆன 20-ஆம் நூற்றாண்டுச் சரிதம்: 1937 டிசம்பர் 26-இல் திருச்சியில் ‘அகில இந்தியத் தமிழர் மாநாடு’ நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாவலர் பாரதியார் தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது நினைவுகூரலாம். திருச்சி மாநாட்டில் பெரியார் ஈவேரா, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேரா. கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், மதுரை பி.டி. இராசன், ஆர்க்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். மறைமலை அடிகளார் போன்றோர் கொண்ட தமிழறிஞர் அவையில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் திருநாள் என மாட்டுப்பொங்கல் தினத்தைக் கொண்டாடவும் நாவலர் விழாவின் தலைமை உரையில் வலியுறுத்தினார். 1949 தைப் பொங்கலின் போது சென்னையில் திருக்குறள் மாநாடு பல தமிழறிஞர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்துள்ளது. திருவள்ளுவருடன் தைப்பொங்கல் பெரிய அளவில் தமிழறிஞர்களால் இணைக்கப்படுவது 1949-ஆம் ஆண்டிலேதான் தொடங்குகிறது [2]. பள்ளிக் கல்வி இல்லாத தமிழர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத் தேர்வாகிய தைப்பொங்கலுடன் திருவள்ளுவரைச் சேர்த்தலை 1949-ஆம் ஆண்டுப் பொங்கலின் திருக்குறள் மாநாடு ஆரம்பித்தது என்று கருதலாம்.
சங்க இலக்கியங்களை அழிவில் இருந்து காத்து அருமையாக அச்சிட்ட உ. வே. சாமிநாதய்யர் அவர்களும் தமிழ்ப் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் திருவள்ளுவர் வரலாற்றாராய்ச்சியைப் பாராட்டிய நிகழ்ச்சி 1939-ல் நடந்திருக்கிறது. அதைப் பற்றி விளக்கமாகப் பதிவு செய்துள்ளவர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆவார். கோயம்புத்தூரில் ’திருவள்ளுவர் படிப்பகம்’ என்ற அமைப்பு அவரை அழைத்து நீண்ட சொற்பொழிவை பிப்ரவரி 1953 ஏற்பாடு செய்தனர். பிரபல விஞ்ஞானி ஜி. டி. நாயுடு அவ்விழாவில் முத்தமிழ்க் காவலரின் பேச்சை ஒலிநாடாக்கருவி (spool tape recorder) கொண்டு பதிவுசெய்துள்ளார். அப்பேச்சை ஒலிநாடாவில் கேட்டு எழுதி 1953 நவம்பரில் திருவள்ளுவர் படிப்பகத்தார் கோவை மாநகரில் அச்சுப் புத்தகமாகப் பிரசுரித்தனர். அது பின்னர் பாரி நிலையத்தாரால் பல பதிப்புகளாய் வெளியாயின. வள்ளுவர் திருநாள், ஆண்டு உருவாக்கத்தில் நாவலர் பாரதியாரின் பெரும்பங்கு இந்நூலால் பெரிதும் தெரிய வருகிறது. 2012-ல் நூற்றாண்டு காணும் மு.வ.வும், ஔவை துரைசாமிப் பிள்ளையும் நூலுக்கு முன்னுரை அளித்துள்ளனர். எனவே, விரிவாக கி. ஆ. பெ. விசுவநாதம், வள்ளுவரும் குறளும், (கோவை, 1953) இங்கே பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்:
வள்ளுவரும், குறளும் (முதற்பதிப்பு: 1953, கோவை. 8-ஆம் பதிப்பு 1966, சென்னை பாரிநிலையம்)

முதற்பதிப்புரை:
வள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற்கின்றது. அது வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பது எங்கள் கருத்து. அறம் வளர, அமைதி நிலவ, இன்பம் பெருக, குறள்நெறி தழைக்க வேண்டும். வள்ளுவர் படிப்பகம் அதற்கென்றே தொண்டு செய்து வருகின்றது.
“வள்ளுவரும் குறளும்” என்ற இந்நூல் படிப்பகத்தின் ஆண்டுவிழாவில் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியது. அது ஓர் சிறந்த நூலாக அமைந்திருக்கிறது. சிறியர், பெரியர், செல்வர், வறியர், ஆண், பெண் ஆகிய அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய செய்திகள் பல இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. ஆண்டு விழாவுக்கு வந்திருந்து, விழாவைச் சிறப்பித்து, இப்பேச்சினை ஒலிப்பதிவு செய்து அச்சிட்டு வழங்கிய வள்ளல் தமிழகத்தின் அறிஞர், உலக விஞ்ஞானி, உயர்திரு. G. D. நாயுடு அவர்களின் அருந்தொண்டிற்கு எங்கள் அன்பு கலந்த நன்றி.
அணிந்துரையும் முன்னுரையும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வணக்கம்.

கோவை -                                                                                                                                                              தங்கள்,
1-11-1953 –                                                                                                                    திருவள்ளுவர் படிப்பகத்தார்
வள்ளுவரும் குறளும்

அன்பும் பிரியமும் உள்ள தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே!
உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர்பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா, பெரியோர்களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெரும் பேறாகவும் கருதுகின்றேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டுகளாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல்களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற்பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளாகும்.
திருவள்ளுவர் படிப்பகத்தையும், திருவாளர்கள் சி. கே. சுப்பிரமணிய முதலியார், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், அ. கந்தசாமிப் பிள்ளை போன்ற பழம்பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரை யழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றும் என்னை ஏன் அழைத்துச் சொல்லச் சொன்னீர்களென்றால், திருக்குறள் புலவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல, புகையிலை வியாபாரிகளுக்கும் சொந்தம் என்று காட்டுவதற்காக அழைத்திருக்கின்றீர்கள் என்றே நான் கருதினேன். அது உண்மையானால், புலவர்களிடத்திலிருந்து திருக்குறளைக் கொள்முதல்செய்து பொதுமக்களிடம் விற்பதுதான் வியாபாரிகளின் கடமையாக இருக்கும்.
நான் அறிந்த மட்டில் சில ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த சில செய்திகளைக்கொண்டு எனது கருத்தை உங்கள் முன்பு கொட்டிக் குவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கு பேச்சாளர் பலரைப் போடவில்லை. “பலரைப் போட்டால் ஒருவரிடமும் ஒன்றாவது சரியாகக் கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒருவன் தான் பேச வேண்டும். அதுவும் நெடுந்நேரம் பேசவேண்டும்” என்று படிப்பகத்தின் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே பேச ஒப்புகிறேன், பேச்சு முடிகிற நேரம் எதுவென்று எனக்குத் தெரியாது. யாராகிலும் ஒருவர் இருவர் அப்படி எழுந்திருந்து போகத் தலைகாட்டுவதுதான் நான் பேச்சை நிறுத்தும் நேரம் என்று முன்னதாகவே இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். பேச்சின் தலைப்பு “வள்ளுவரும் குறளும்” என்பது. பேச்சின் குறிக்கோள் ‘நீங்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டுமென்பது. பேசுவதின் கருத்து ‘வள்ளுவர் உயர்ந்தவர், குறள் சிறந்தது’ என்பது. பேச்சினுடைய பலன் இனிமேல் உங்களிடத்திலே நாங்களெல்லாம் கண்டு மகிழப் போவது.
முதலில் பேசவேண்டுவது வள்ளுவரைப்பற்றி. அவரைப்பற்றிச் சொல்லவேண்டியது சில சொற்கள்தான். வள்ளுவர் பலர்; திரு சேர்ந்த வள்ளுவர் ஒருவர். குறள் பல; ஆனால், திரு சேர்ந்த குறள் ஒன்றுதான் உண்டு. திரு அடைமொழியாகச் சேர்ந்து தனிச்சிறப்பை யளிக்கின்ற பெயர்கள் தமிழ் நாட்டிலே பல உள. பல கோவை உண்டு நூல்களிலே. திரு சேர்ந்த கோவை ஒன்றே ஒன்றுதான். அது திருக்கோவை. பதிகள் பல உண்டு தமிழ்நாட்டிலே; ஆனால் திரு சேர்ந்த பதி திருப்பதி ஒன்றுதான். வாசகம் பல; ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று. அது திருவாசகம். வள்ளுவர் என்று சாதியாலும் பெயராலும் பலர் இருந்தார்கள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். திரு சேர்ந்த அந்தப் பெயருக்கு உரியவர் ஒருவர்தான். ‘திரு’ தனிச் சிறப்பு. அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.
அவர் நமது நாட்டிலே கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இன்று (15-2-1953) கிறிஸ்து பிறந்து ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளாயின. அதற்கு முன்னே பிறந்தவர் வள்ளுவர். அவர் பிறந்து 1984 ஆண்டுகளாயின. அவரைப் பற்றிய கதைகள் தமிழ்நாட்டிலே பல. அவையனைத்தும் அறிஞர்களாலே வெறுத்து ஒதுக்கப் பெற்றவைகள். திருவள்ளுவரைப் பற்றித் தமிழ்நாட்டில் வழங்குகின்ற கதைகள் கணக்கற்றவை. மயிலாப்பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை; ஆதி என்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்பது மற்றொரு கதை. ஏலேலசிங்கனாலே எடுத்து வளர்க்கப் பெற்றார் என்பது இன்னொரு கதை. அவர் மயிலாப்பூரில் கோயில் கொண்டார் என்பது வேறொரு கதை. அவர் வாசுகி என்ற ஒரு பெண்ணை மணந்தார்; அந்த அம்மாள் கிணற்றிலே தண்ணீரை இறைத்தார்கள்;‘அடி!’ என்பார். குடத்தை விட்டுவிட்டு ஓடி வருவார்கள்; திரும்பிப் போய்த்தான் பாதியில் தொங்கும் குடத்தை இழுப்பார்கள் என்பது இன்னொரு கதை. எத்தனையோ கதைகளைத் தமிழ்நாட்டில் புகுத்தி வைத்தார்கள். இந்தக் கதைகளால் உங்களுக்கும் நமக்கும் ஆவதென்ன? “உண்மையான வரலாறு எது?” என்ற ஐயப்பாடு தமிழ்நாட்டிலே உள்ள புலவர் பெருமக்களுக்குத் தோன்றியது.
“வள்ளுவர் வரலாறு எது?” என்று அறியப் புலவர்கள் அனைவரும் கூடினார்கள். கூடிய நகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி; கூடிய நாள் 1939 மார்ச் 31. தலைமை வகித்தவர் மகாம்கோபாத்தியாய உ. வே. சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற்பட்டவர்கள். பேசியவர் 11 பேர். 10 பேர் பேசியும் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சுதான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்கவேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர். கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து ‘இது தான் சரி’ என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகத் தழுவிக் கட்டிக்கொண்டு மக்களுக்கு அறிவித்தார். அப்புறம் வசிஷ்டரே இராஜரிஷி என்று ஒப்புக்கொண்ட பிறகு உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியுமா? ஒப்ப வேண்டியதுதான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி. அந்தப் பேச்சினை, உடனே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக்கொண்டு, மதுரைக்குச் சென்று அச்சடித்து வழங்கினார்கள். உரிமையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். விலை நான்கணா விதிக்கப் பெற்றது. இப்படிச் சொன்னதனாலேயே நீங்கள் ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிடாதீர்கள், புத்தகம் வேண்டுமென்று. பதிலே வராது. நேரிலே போய்க் கேட்கலாம் என்று துணிந்து போனால் புத்தகம் அங்கு இருக்காது. நாங்கள் அச்சடிக்கிறோம் என்று கேட்டாலும் அச்சடிக்கிற உரிமையும் கொடுக்கமாட்டார்கள். இது இன்று அவர்கள் செய்யும் நல்ல தமிழ்த்தொண்டு!
அவ் வரலாற்றினுடைய தொகுப்பு இதுதான். “வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன். நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு அரசனது உள்படு கருமத் தலைவராக (Private Secretary) இருந்தவர். அதாவது, அரசனது கருத்தை மக்களுக்கு அறிவிக்கும் தொழிலைப் பெற்றிருந்தவர். இந்தத் தொழில் காரணமாகவே வள்ளுவர் என்ற பட்டத்தைப் பாண்டியனால் பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவியாய்ப் பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூலை நன்றாகச் செய்து கொடுத்து நம்மை விட்டு மறைந்தவர்.” இதுதான் அந்நூலின் தொகுப்புக் கருத்து. வள்ளுவரைப்பற்றி அறிய இது போதும்.”'

————————————————————————————————————————————————————————–
நாவலர் 1959-ல் மறைந்துவிட்டார். அவர் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தவர் திருவள்ளுவர் தொடராண்டு என எடுத்த முடிவுகளைக் கி. ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரா. கா. சு. பிள்ளை, டாக்டர் மு.வ., முனைவர் சி. இலக்குவனார் போன்றோர் பரப்புரை இடையறாது 1960களில் செய்துவந்தனர். 49 தமிழ் அறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் [3] கொண்ட தமிழகப் புலவர் குழு 9.5.1971இல் திருச்சியில் நடந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு வாரம் முழுதும் விழாவாகக் கொண்டாடல் வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி பொங்கல் பெருநாள். தமிழர் திருநாள் -பொங்கல் பெருநாள்: மார்கழி இறுதி நாள் : போகி விழா, தை 1 : தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா, தை 2 : திருவள்ளுவர் விழா, தை 3: உழவர் விழா, தை 4 : இயல்தமிழ் விழா, தை 5: இசைத்தமிழ் விழா, தை 6 : நாடகத் தமிழ் விழா.
1971-ல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் திருவள்ளுவராண்டு செயல்படத் தொடங்கியது. தமிழறிஞர் பலர் பாராட்டினர். டாக்டர் மு. வ. அவர்கள் புதிதாக பொங்கலில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டுப் புத்தாண்டு பற்றி எழுதினார்: ”இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.” (1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).

ஆய்வு உசாத்துணை:
[1] 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி:

[2] 1949-ல் பொங்கலின் போது நடந்த திருக்குறள் மாநாடும், பங்கேற்ற தமிழறிஞர்களின் சொற்பொழிவுச் சுருக்கங்களும்:

[3] சங்கத் தமிழ்ப் புலவர்கள் 49 பேர் என்பது இடைக்காலச் சைவ இலக்கிய மரபு. முதலில் இம் மரபை திருவள்ளுவமாலையில் காண்கிறோம். 49 என்னும் எண் வடமொழியின் எழுத்தெண்ணிக்கை ஆகும். இந்த எண்ணைக் கொண்டு கற்பனையான புலவர் பெயர்களைத் தருகிறது திருவள்ளுவமாலை. இப் புராணக்கதையின் வளர்ச்சியைத் திருவிளையாடல் புராணத்தில் ‘சங்கப் பலகை அளித்த படலம்’ அழகாகப் பாடுகிறது. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா உரையுடன் மேலும் ஆராய விரும்புவோருக்காக என் வலைப்பதிவில் தந்துள்ளேன் – நா. கணேசன்


--------------

வல்லமை இணைய இதழிலும், பெரியார் தோற்றுவித்த விடுதலை (சென்னை) இதழிலும் அச்சான கட்டுரை.