ஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)

தமிழ்நண்பர்களுக்கு ஓர் அழைப்பு! வரும் ஞாயிறு (20-ஆம் தேதி) மதியம் ஈரோட்டுக்கு நல்வரவு!

ஈரோடு பதிவர்கள் சங்கமம், மாலை 4 மணி, டிசம்பர் 20, 2009

ஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு (பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம் என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும். பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும். ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று: ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர கபாலம் = ஈர ஓடு.

அடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர் வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர் திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக் காத்தளித்த இடம். ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு, பேரோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின் உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.

---------------

2009-ன் முக்கிய வலைப்பதிவுலக நிகழ்வாக ஈரோடு பதிவர் சங்கமம் நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ் அறிஞர்கள் புலவர் செ. இராசு (அவர் கண்டறியத் தந்தவற்றுள் புள்ளி எழுத்துள்ள அறச்சலூர்க் கல்வெட்டு இந்தியாவின் முதல் இசைக்கல்வெட்டு), முனைவர் மு. இளங்கோவன், முனைவர் குணசீலன் (திருச்செங்கோடு கல்லூரி), பாலசுப்ரமணியன் (திருப்பத்தூர்), எழுத்தாளர் க. சீ. சிவகுமார், தமிழ்மணம் காசி, ... பலர் கலந்து கொள்கின்றனர். இந்த முக்கியத் தமிழ்க் கூடல் பற்றி தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அறிவிப்பு செய்யப்படுகிறது. பழமைபேசி அமெரிக்காவில் இருந்துவந்து தம் துய்ப்பறிவைப் பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு பத்திரிகைகளிலும் அறிவிப்பு.

இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில்,
பெருந்துறை ரோடு, ஈரோடு)

அரங்கம் நகரத்தின் மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்

நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்

தேநீர் இடைவேளை

பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு

கலந்துரையாடல்

மாலை 07.00 மணி
இரவு உணவு

அவசியமாக, நீங்களும், குடும்பத்தாரும், உறவு, நண்பர்களும் தமிழ்க் கணிமை ஆர்வலர்களைச் சந்திக்கவும், கணினி, மின்மடல் (தமிழ்), பதிவு தொடங்கல், ... குறித்த ஐயம் தெளியவும் ஈரோடு நிகழ்ச்சிக்கு வந்து பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
1. ஆரூரன்
2. வால்பையன்
3. ஈரோடு கதிர்
4. க.பாலாசி
5. வசந்த்குமார்
6. அகல்விளக்கு
7. கார்த்திக்
8. கோடீஸ்வரன்
9. நந்து
10. லவ்டேல் மேடி
11 தங்கமணி
12. சண்முகராஜன்
13. தாமோதர் சந்துரு
14. முருக.கவி

ஈரோடு பதிவர் சங்கமம் பற்றிய வலைமலர்கள்:
http://maaruthal.blogspot.com/2009/12/blog-post_14.html
http://pithatralgal.blogspot.com/2009/12/blog-post.html
http://kaalapayani.blogspot.com/2009/12/2009.html
http://valpaiyan.blogspot.com/2009/12/blog-post_04.html
http://arurs.blogspot.com/2009/12/blog-post_05.html
http://agalvilakku.blogspot.com/2009/12/blog-post.html
http://maniyinpakkam.blogspot.com/2009/12/blog-post_17.html

மேலும் விபரங்களுக்கு...

ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540
பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

அனைவருக்கும் நன்றி!
நா. கணேசன்

5 comments:

கோவை சிபி said...

தகவலுக்கு நன்றி.பெருந்துறை,பூந்துறை பற்றிய பெயர்க்காரணங்களை அறிய முடியுமா?

ஈரோடு கதிர் said...

கூடல் குறித்த நல்லதொரு இடுகைக்கு நன்றி அய்யா!

ஆரூரன் விசுவநாதன் said...

அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.....

அன்புடன்
ஆரூரன்

V.N.Thangamani said...

பதிவுக்கு நன்றி அய்யா, தாங்களும் கலந்து கொண்டிருந்தால்
நன்றாக இருக்கும்.
இரண்டு ஓடைகள் சந்திக்கும் இடம் ஈரோடை என்று இருந்து, பின்
"ஈரோடு" ஆக மருவியதாக கூறப்படுகிறது. சரியா அய்யா.

ஈரோடு பதிவர் சங்கமம் பற்றிய வலைமலர்கள் பகுதியில்
எனது பதிவையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அய்யா.
http://vnthangamani.blogspot.com/2009/12/blog-post.html
நன்றி அய்யா.
வாழ்க வளமுடன்.

கண்மணி/kanmani said...

மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
மொக்கைப் பதிவுகள் போட்டு சூடான இடுகையில் இடம் பிடிப்பதை விட நல்ல இடுகைகள் எழுதி பின்னூட்டம் பெறவில்லையென்றாலும் வெகுஜன பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டும் தரம் பெற்றவர்களுக்கு
//மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//

மனமர்ந்த வாழ்த்துக்கள்