கோவையில் உத்தமம்-தமிழ்மணம்-விக்கிபீடியா அறிமுகவிழா, நவம்பர் 7 (குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில்)


நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு

கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.

குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். ஆ. முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.

உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. சே. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் என்னென்ன தமிழ்க் கணிமைத் திட்டங்களில் ஈடுபடலாம், அவற்றுக்கு யார் உதவியைப் பெறலாம் என்பது குறித்து கலந்துரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

tm-banner
அனைத்து விக்கிப்பீடியா, வலைப்பதிவு, தமிழ்க் கணிமை ஆர்வலர்களையும் இந்த ஒன்று கூடலுக்கு வரவேற்கிறோம். நன்றி.

இடம்: குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.
D-தொகுதி கருத்தரங்க அறை (முதல் தளம். உணவகத்துக்கு எதிர்ப்புறம்.)

நேரம்: நவம்பர் 7, 2009 சனிக்கிழமை. பகல் 2.00 முதல் 4.00 மணி வரை.

வழி: சரவணம்பட்டி, அன்னூர் செல்லும் பேருந்துகள். பேருந்து எண் 45.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து தானி மூலம் கல்லூரிக்கு வர 30 ரூபாய்.

உதவிக்கு: பேரா. ஆ. முத்துக்குமார் 99444 36360There is a Tamil IT Workshop and an Introductory Session on Tamil Wiki, Blogs, TamilManam & INFITT (http://infitt.org)

INFITT Executive Director, Mr. KaviArasan (Ohio, USA) is participating along with A. Ravisankar, a Tamil Wikipedian and others,
http://bit.ly/tamil-computing-meet

The meeting is at Kumaraguru College of Technology, Coimbatore
http://en.wikipedia.org/wiki/Kumaraguru_College_of_Technology
on November 7, 2009, 2-4 PM, D-Block Conference Room.

Our sincere thanks to Prof. A. Muthukumar for arranging the INFITT Tamil IT event.

Please call your friends and ask them to attend the KCT event if they can.

Thanks,
N. Ganesan

3 comments:

தமிழநம்பி said...

இவ்வறிமுக விழாவைப் புதுச்சேரியிலோ சென்னை அல்லது விழுப்புரத்திலோ நடத்தும் திட்டம் எதுவும் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.

SanjaiGandhi™ said...

அறிவித்துவிட்டேன் சார்

http://www.blog.sanjaigandhi.com/2009/11/tamil-it-workshop-in-coimbatore-on-nov.html

அறியத்தந்தமைக்கு நன்றி. வாழ்த்துகளும்.

மு.இளங்கோவன் said...

கோவை நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி