உயிர்வருக்க ஆத்திசூடி - உடல் எழுத்து! (வைரமுத்து)


உடல் எழுத்து
(உயிர்வருக்க ஆத்திசூடி)


அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈறழுந்தப் பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகைமது.
ஓட்டம் போல் நட.
ஒளடதம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்!

~ வைரமுத்துஉசாத்துணை ஆதாரம்:
http://kolipaiyan.blogspot.com/2009/09/blog-post_18.html
(எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன் ~ நா. கணேசன்)

1 comments:

மோகனன் said...

அருமையாக இருக்கிறது...

நான் (2007-ல்)எனது மகனுக்காக உம்கார ஆத்திசூடி எழுதி இருக்கிறேன்... இது சிறார்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்... முடிந்தால் வாசிக்கவும்..பிடித்திருந்தால் மீள்பதிவு செய்யுங்களேன்...

http://kuttivall.blogspot.com/2008/05/blog-post_6424.html