அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன் (29 மே 1923 - 15 அக். 2009)

ஓதுவார் சுவாமிகளின் “நிலையாப் பொருளை ...” திருப்புகழ்:
NILAYAAPPORULAE song from album KANDARALANGARAM & NAVARATNA THIRUPPUKAZH - SmasHits.com


நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ...... மவமேபோய்

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய ...... நெறியாக

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ...... மருள்வாயே!

 இரங்கல் கவிதை

சுண்டிப் பிடிக்கும் தருமபுரம்
சுவாமி நாதன் குரல்வழியே
கண்டுப் பண்ணில் தேவாரம்
காது நிறைய நாம்கேட்டோம்
மொண்டு வந்தே இறையுணர்வு
மூள வைத்தார் நெஞ்சத்தில்
எண்டி சையும் புகழ் சிறக்க
இவர்தம் நாமம் வாழியவே!
~ இலந்தை

நெஞ்சை நெகிழ்த்தும் செய்திஇது!
நீவி விட்டுத் தளர்த்தாமல்
பிஞ்சாய்ப் பறித்தே இந்த ‘யமன்’
பெருமை கொண்டான் படுபாவி!
கொஞ்சம் அழுதே மூச்சிழுத்தேன்;
குனிந்தேன்;நண்பர் மதித்-- ‘துணையும்”
வஞ்ச யமன் கொண்டானே!
‘வையக்’ காள மேகமெங்கே??

~ கவியோகி


மலரஞ்சலிகளுடன்,
நா. கணேசன்

அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) அளவில் அவரது உயிர் பிரிந்தது.

நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சில காலம் இருந்தார். பின்னர் போரூர், குன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்கே வந்தார். அவரின் துணைவியார் கூடவே இருந்தார். பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள் வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர் அவரது நலன் பேணி வந்தனர்.

யாழ்ப்பாணத்தில், 1960களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். அக்காலத்திலிருந்து அவரை நான் அறிவேன்.

சென்னைக்கு வந்த பின்னரும் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் இல்லம், தமிழிசைச் சங்கம், சென்னையில் உள்ள திருக்கோயில்கள் என அவர் எங்கிருந்தாலும் சென்று சந்திப்பேன். அவர் இசையில் ஒன்றிவிடுவேன்.

1993இல் என் தந்தையார் சென்னையில் காலமான பொழுது என்னிடம் வந்து ஆறுதல் கூறி, நீத்தார் வழிபாடுகளில் பண்ணிசைத்தார்.

பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.

உலகெங்கும் இன்று பரந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இல்லத்திலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்களது முயற்சியால், திருவான்மியூர், கனால் வீதியிலுள்ள வாணி பதிவகத்தாரின் விசயராகவன், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் குரலிசையைப் பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்குப் பதிவு செய்து விற்பனைக்குத் தருகிறார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் என் வேண்டுகோளை ஏற்றுத் தந்தனர்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர் துயருற்றுக் கதற, கண்ணீர் விட, தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.

=============================

சென்னை, அக். 15: தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் ப.சுவாமிநாதன் (86) வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி சுலோச்சனா அம்மாள் உள்ளார்.வாழ்க்கை குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில் 29-5-1923-ம் ஆண்டு, மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது 12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார். அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவர் முன்னாள் ஆளுநர் கே.கே.ஷாவிடம் கலைமாமணி விருதையும், ஜி.கே.மூப்பனாரிடம் தமிழிசைச் சங்கம் சார்பில் இசைப்பேரறிஞர் விருதையும் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சார்பில் தமிழக அரசவைக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு, அப்போது நிதி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியனால் சிறப்பிக்கப்பட்டார். குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமையும் இவரையே சாரும். 100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய 11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும் கோவில்களிலும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


http://www.thehindu.com/thehindu/fr/2002/12/13/stories/2002121301420800.htm

Listening to a Thevaram or the devotional hymns sung at the specific Kaala, and Sandhi or Saayarakashai worship, be it at a Siva temple or that of the other Parivara Devatas, especially in the enchanting stillness in the interior of the south is a divine experience. Such is the glorious service of the Oduvar Murtis in the South-Indian temple tradition. The mere mention of the Tirumurai-rendering or Tamizhisai, will remind one of the veteran singer Dharmapuram P. Swaminathan, a devout soul dedicated to the saintly compositions.

Dharmapuram P. Swaminathan, was born in Thanjavur district in 1923. His early training in Thevara Isai began at the Dharmapuram Thevara Tamizhisai Palli, under Tirumurai Kalanidhi R. Velayudha Oduvar, for a period of five years. Swaminathan continued his training in Carnatic vocal further at the Annamalai University under the guidance of Chittoor Subramania Pillai and secured the Sangita Bhooshanam title from this august institution, with a First class. With Madurai Subramania Mudaliar, Swaminathan continued his lessons in music for some more years.

His musical career, which spans over nearly six decades, is full of devotional pursuits and propagation of Tevara Isai. His association with several temple renovation projects and his voluntary contribution through his music towards such noble endeavours form an endless list. He has been an A Grade artist of AIR since 1952. The number of discs to his credit is 12 discs and 700 audiocassettes.

Awards and Honours have been showered on him for his unique contribution to this sphere of devotional music. Isai Perarignar from Tamizhisai Sangam, Kalaimamani from the Tamil Nadu Government, State Artist, Tamilnadu Government, the President's Award, titles and honours from Dharmapuram, Kundrakkudi, Madurai, and Thanjai Adheenams. He has established a Charitable Trust in his name, at Kundrathur, Chennai.

13 comments:

கானா பிரபா said...

அன்னாருக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள்

ஆயில்யன் said...

என்னை பொறுத்த அளவில் அவரின் திருவாசக ஆடியோவின் மூலமே சிவபுராணம் முழுவதும் கேட்டு கேட்டு பின்னாளில் முழுமையாக பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றேன்!

சைவத்தமிழ் உலகெங்கும் தழைத்தோங்க காரணமாயிருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் - தருமபுரம் சுவாமிநாதன்.

ஆன்மா நிம்மதியடையட்டும்!

ஓம் நமச்சிவாய!

KABEER ANBAN said...

ஓம் நமசிவாய

நல்ல இசை ஞானமும் தெளிவான தமிழும் பக்தியை உள்ளடக்கி வரும் அவரது பாடல்கள் கேட்கக் கேட்க திகட்டாதவை. அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். அவர் குரல் என்றும் வாழும்.

ஆரூரன் விசுவநாதன் said...

சிறு வயதில் அவர் பாடக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

"வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொல்லக் கேட்டால்" என்ற பாடலை ஒவ்வொருமுறையும் பாடும் படி சீட்டு எழுதிக் கொடுப்பேன். சிரித்துக் கொண்டே சலிக்காமல் எனக்காக பாடியிருக்கிறார். அப்போது எனக்கு வயது சுமார் 13,14 தான் இருக்கும்.

அண்ணாரது மறைவு மிகப்பெரிய இழப்புதான்.

மேற்படி பாடலின் இணைப்பிருந்தால் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ஆரூரன்

Unknown said...

உங்கள் பதிவின் மூலம் தருமபுரம் சாமிநாதன் இறைமை எய்தினார் எனத்தெரிய வந்தது. அவர் பாடல்கள் சில கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ள திருப்புகழ் கேட்க வேண்டும். சில ஆண்டுகள் முன்பு நான் கேட்ட தருமபுரம் சாமிநாதன் பாடிய சுந்தரரின் தேவாரவரிகள் "நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே" என்ற அருமையான பதிகஒலிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன. இனிமை தருகின்றன. அவர் தமிழர் நனவில் நிலையாக வாழ்க.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
அக்டோபர் 15, 2009

Kanags said...

விக்கியில் அன்னாருக்கு அஞ்சலி:

தருமபுரம் ப. சுவாமிநாதன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் திருவாசகமும்; சிவபுராணமும் ஒலிநாடாவில் கேட்டு இன்புறுவேன்; பல வரிகள் "மனம் கசிந்து கண்ணீர் மல்க" வைக்கும்.
அன்னார் ஈசன் திருவடியில் இளைப்பாறுவார்.

மயிலாடுதுறை சிவா said...

அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

இதுப் போல தமிழ்பணி செய்தவர்களை நாம் எப்படி மறக்காமல் நினைவில் வைத்து போற்றுவது?

மயிலாடுதுறை சிவா....

S.Muruganandam said...

ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே என்று தேவார, திருவாசக திருமுறைக்ளை உள்ளமுருக பாடிப் பரப்பிய தருமபுரம் ஐயா அவர்கள் நிச்சயம் திருக்கயிலை நாதருக்கு தொண்டு செய்து கொண்டிருப்பார்.

அவருக்கு அஞ்சலி பதிவெழுதிய தமிழ் கொங்கு அவர்களுக்கு நன்றிகள்.

Unknown said...

தமிழ் பக்தி பாடல்கள் பாடுவதில் நிகர் அவரே.வாழ்க என்றும் அவர் புகழ்

Unknown said...

தமிழ் பக்தி பாடல்கள் பாடுவதில் நிகர் அவரே.வாழ்க என்றும் அவர் புகழ்

Natarajan said...

என் மகள் திருமண நிகழ்வில் 24/06/2005 அன்று முகூர்த்த நேரத்தில் அரை மணி நேரம் சபையை தன்னுடைய இனிய குரலால் மகிழ்வித்தார். அன்று அவர் வயது 85. குரலில் இம்மியளவும் தொய்வில்லை. என்றும் மறவேன் அவரை. C.நடராஜன்.அண்ணாநகர் சென்னை.

Sivanandh said...

A divine soul🙏