’நல்லிசை’ கூகுள்குழுவில் பங்கேற்க வாருங்கள்!

வெகுஜன மக்களின் மனங்கவர்ந்த பாடல்கள், செவ்வியல் தன்மை கொண்டவை, 1960, 1970களில் பிரபலமாக இருந்தவை, கிராமியப் பாடல்கள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், இளையராஜா, ரகுமான் ... பாடல்கள், கர்நாடக சங்கீதம் (வசந்தகுமாரி, எம்எஸ்,மகராஜபுரம், பாலமுரளி, ஏசுதாஸ், ...,) தமிழிசைக் கீர்த்தனங்கள், தெருக்கூத்து விவரணக் குறும்படங்கள், சங்கீதக் கச்சேரிகளில் பாடப்பெற்ற நல்ல தமிழிசைப் பாடல்கள் இவற்றின் எம்பி3 அல்லது காணொளித் தொடுப்புகளை ஆவணப் படுத்தவும், அலசவும் ஓரிடம் இருக்கலாமே என்று நினைப்பதன் விளைவே ”நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை" என்னும் மின்னம்பலம். நல்லிசைக் குழுமம் உங்களை வரவேற்கிறது, நல்லிசைக் குழுவில் இணைந்து கொள்ளலாமே!
http://groups.google.com/group/nallisai

Google Groups
Subscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை!


Email:

Visit this group


செந்தமிழிசை, தெருக்கூத்து குறும்படங்கள், நாட்டார் பாட்டு, கர்நாடக சங்கீதம், திரையிசைப் பாடல்களுக்கான சங்கீதக் குழு. YouTube, Cool Toad, hummaa, imeem போன்ற இணையதளங்களில் இருந்து செவ்வியல் நற்பாடல்களுக்குத் தொடுப்புத் தரவேண்டும். பாடல் வரிகளையும், இராக தாளங்களையும் குறிப்பிட முடியுமானால் சிறக்கும்.

மோகனத்தில் - முல்லைப் பண்ணில் தமிழ்நாட்டரசின் தமிழ்த்தாய் வாழ்த்து:


உலகச் சுழல்கோளத்தின் மீது அமர்ந்து தமிழ்த்தாய் யாழ் மீட்டத் தொடங்கிவிட்டாள்!

நல்லிசைத் தேர் உலா வரத் தொடங்கிவிட்டது. வடம் பிடிக்க வாரீர்!


இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே!
இதய நிழலில் இசையை இருத்தி இன்னல் துறப்போமே!

Google Groups
Subscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை!

Email:

Visit this group


Nallisai E-list will be useful and specially welcomes Tamil students and Music lovers from all over the World! Nallisai looks forward to their participation and contributions.

4 comments:

Anonymous said...

Best wishes!

Radha

பேரூர் சாந்தலிங்கர் ,Perur Santhalingar said...

பணி சிறக்க வாழ்த்துகிறேன்.தக்கை இராமாயணம் எனும் கவிநூல் தக்கை எனும் கருவிகொண்டு பாடப்பட்டதாக அறிகிறேன்.தக்கை பற்றிய படமோ,குறிப்புகளோ இருந்தால் கூறுமாறு வேண்டுகிறேன்.
v.kambili@gmail.com

பழமைபேசி said...

அண்ணா, நான் குழுமத்துல இருந்தாலும் சிரத்தையா பங்களிப்புச் செய்ய முடியலை இவ்வளவு நாளும். இன்னமேல் வரப் பாக்குறனுங்க!

PNA Prasanna said...

நல்ல செய்திகளை அள்ளித்தருகின்றீர்கள். வாழ்த்துக்கள்.