70 பேரு‌க்கு கலைமாமணி விருது

70 பேரு‌க்கு கலைமாமணி விருது: த‌மிழக அரசு அறிவிப்பு
செ‌ன்னை, செவ்வாய், 24 பிப்ரவரி 2009

இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த 70 பேருக்கு கலைமாமணி விருதுகளை த‌‌மிழக அரசு அறிவி‌த்து‌ள்ளது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை த‌மிழக அரசு வழங்கி சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளையேற்று முதலமைச்சர் கருணாநிதி பின் வருமாறு அறிவிப்பு செய்துள்ளார்.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் விபரம் வருமாறு :

இய‌ற்றம‌ி‌ழ்‌‌க் கலைஞர் மாதவன், இயற்றமி‌ழ்க் கவிஞர் சிற்பி, இயற்றமி‌ழ்க் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர் டாக்டர் சரளா ராஜகோபாலன், இயற்கலை பண்பாட்டு கலைஞர் குருசாமி தேசிகர், இலக்கியப் பேச்சாளர் டாக்டர் அவ்வை நடராஜன், இலக்கியப் பேச்சாளர் மாசிலாமணி- கன்னியாகுமரி, இசை ஆசிரியர் சீர்காழி எஸ்.ஜெயராமன், எம்.எஸ்.முத்தப்பா- நாகர்கோவில், இசை ஆசிரியர், குரலிசைக் கலைஞர் மகாராஜபுரம் சீனிவாசன்.

குரலிசைக் கலைஞர் ஏ.வி.எஸ்.சிவகுமார், வயலின் கலைஞர் எம்பார் கண்ணன், மிருதங்கக் கலைஞர் சென்னை வழுவூர் ரவி, டிரம்ஸ் கலைஞர் டிரம்ஸ் சிவமணி- சென்னை, சமய சொ‌ற்பொ‌‌‌‌ழிவாள‌ர் சுகி சிவம்- சென்னை, இறையரு‌ட் பாடக‌ர் டாக்டர் எஸ்.சதாசிவன்-நாகர்கோவில், இறையரு‌ட் பாடக‌ர் வீரமணி ராஜூ, நாதசுரக் கலைஞர் டி.வி.ராஜகோபால் பிள்ளை- திருவாரூர், நாதசுரக் கலைஞர் எஸ்.வி. மீனாட்சிசுந்தரம்- லால்குடி, தவில் கலைஞர் தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன், த‌வி‌ல் கலைஞ‌ர் ஏ.மணிகண்டன்- சேந்தமங்கலம்.

பரத நாட்டியக் கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


பரத நாட்டிய ஆசிரியர் செல்வி ஷைலஜா, பரத நாட்டியக் கலைஞர் செல்வி ஸ்வேதா கோபாலன், பரத நாட்டியக் கலைஞர் செல்வி சங்கீதா கபிலன், பரத நாட்டியக் கலைஞர் செல்வி கயல்விழி கபிலன், பரத நாட்டியக் கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நாட்டிய நாடகக் கலைஞர் வசந்தா வைகுந்த், நாடக ஆசிரியர் டாக்டர் மு.இராமசாமி, நாடகத் தயாரிப்பாளர் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, நாடக நடிகை ஆர்.ராஜாமணி, இசை நாடக மிருதங்கக் கலைஞர் சி.டேவிட்.

இசை நாடக ஆர்மோனியக் கலைஞர் புதுக்கோட்டை ச.அர்ச்சுனன், தெருக்கூத்துக் கலைஞர் விழுப்புரம் விசுவநாதன், காவடியாட்டக் கலைஞர் சங்கரபாண்டியன், வில்லுப்பாட்டுக் கலைஞர் வேலவன் சங்கீதா, ஒயிலாட்டக் கலைஞர் பெ.கைலாசமூர்த்தி- தூத்துக்குடி, காளியாட்டக் கலைஞர் துறையூர் முத்துக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், திரைப்பட இயக்குநர் சேரன், திரைப்பட நடிகர் சுந்தர். சி, திரைப்பட நடிகர் பரத், திரைப்பட நடிகைக‌ள் நயன் தாரா, அசின், மீரா ஜாஸ்மின், திரைப்பட குணச்சித்திர நடிகர் வி.பசுபதி, திரைப்பட குணச்சித்திர நடிகை ஷோபனா.

திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி, பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜா தேவி, திரைப்பட வசனகர்த்தா வேதம்புதிது கண்ணன், திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், திரைப்பட கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி, திரைப்பட புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன், திரைப்படப் பத்திரிகையாளர் நவீனன், ஓவியக் கலைஞர் சீனிவாசன், சின்னத்திரை இயக்குநர்க‌ள் சுந்தர் கே.விஜயன், திருச்செல்வன், சின்னத்திரை கதை வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, சின்னத்திரை நடிகர் அபிஷேக், சின்னத்திரை நடிகை செல்வி அனுஹாசன்.

சின்னத்திரை குணசித்திர நடிகர் அமர சிகாமணி, சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா, சின்னத்திரை ஒளிப்பதிவாளர் எம்.எம்.ரெங்கசாமி, சின்னத்திரை நிக‌‌ழ்ச்சி தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா, இசைக் கலைஞர் வி.தாயன்பன், இயற்றமி‌ழ்க் கலைஞர் டாக்டர் அ.மறைமலையான், பரத நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், இயற்றமி‌‌‌ழ்க் கலைஞர் சரோஜ் நாராயணசுவாமி, இயற்றமி‌ழ்க் கலைஞர் ஆண்டாள் பிரியதர்சினி, இயற்றமி‌ழ்க் கலைஞர் அரிமா கோ.மணிலால், இயற்றமி‌ழ்க் கலைஞர் முனைவர் பெரு மதிழயகன், நாடகக் கலைஞர் ஓ‌ய் ஜான்சன்.

பொற்கிழி பெறுவோர் : இசை நாடகப் பாடலாசிரியர் மதுரை என்.எஸ்.வரதராசன், செ‌ன்னை புர‌வியா‌ட்ட கலைஞ‌ர் டி.சி.சுந்தரமூர்த்தி, நாடக நடிக‌ர் செ‌ன்னை டி.என்.கிருஷ்ணன்.

சிறந்த நாடகக் குழு : கலைச் செல்வம், சாம்புவின் “ஸ்ரீ சங்கர நாராயண சபா’’ ஆடுதுறை. சிறந்த கலை நிறுவனம் தமிழிசை மன்றம், திருவையாறு

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0902/24/1090224057_1.htm

0 comments: