யாழ்ப்பாணம் பேரும் சிவபக்தன் ராவணன் யாழ்மீட்டியதும்

நண்பர்களே,

யாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்தி ஏதாவது புத்தகம், கட்டுரையில் நீங்கள் படித்ததுண்டா?

நா.கணேசன்

Is there any Tamil version of a myth explaining the name, YaazhppaaNam with RaavaNan playing his lute & singing music to Siva. And because Lanka is the land of Ravana, yaazhpaaNam comes from this myth.

For example, see
"The current account of the founding of Jaffna is purely mythical, whether we regard the tale of the blind lutist, or the still more legendary story of Siva, Susangita and the lute of Ravana. " (SINHALESE PLACE NAMES IN THE JAFFNA PENINSULA By B. Horsburgh, C.C.S.THE CEYLON ANTIQUARY [VOL. II, Part 1] July, 1916 ).

Many thanks,
N. Ganesan

1 comments:

வெற்றி said...

அன்பின் நா.கணேசன்,
யாழ்ப்பாணம் எனும் இடப்பெயரையும் இராவண மன்னனையும் தொடர்புபடுத்தி நான் இதுவரை ஒரு புனைகதையோ அல்லது வரலாற்று நூலையோ படித்ததில்லை.
நீங்கள் சொல்லும் சங்கதியை நான் இது வரை கேள்விப்படவில்லை.

யாழ்ப்பாணம் எனும் பெயர் வருவதற்கு முன் அவ்விடத்தின் பெயர் மணற்றி எனவும், அதன் பின்னர் தமிழகத்தில் இருந்து வந்த குருட்டுக் கவிஞன், பாணன் தனது யாழ் இசையால் அன்று இலங்கையை ஆண்டு வந்த சோழ மன்னன் எல்லாளனை மகிழ்வித்ததால் மணற்றியை அப் பாணனுக்குப் பரிசாக அளித்ததாகவும், அதன் பின்னரே அவ்விடத்திற்கு யாழ்ப்பாணம் எனும் பெயர் வந்ததாகவும் நான் யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூல்களில் வாசிச்ச ஞாபகம்.

நான் மேற்குறிப்பிட்ட நூல்கள் 'நூலகம்' எனும் இணையத்தளத்தில் இருக்கிறது.

இதோ அதன் சுட்டிகள்:

யாழ்ப்பாணச் சரித்திரம்:
http://www.noolaham.net/project/13/1207/1207.pdf

ஈழத் தமிழர் தொன்மை:
http://noolaham.net/project/06/565/565.pdf

ஆனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் எப்படி இவ்விடத்துக்கு வந்தது என்பதில் பலவிதமான (செவிவழிக்)கதைகள் இருக்கிறது என நினைக்கிறேன். நான் மேற்கூறிய நூல்களும் செவிவழியாக வந்த தகவல்களே அன்றி வரலாற்றை ஆய்வு செய்து எழுதியதாக நான் நினைக்கவில்லை.