திராவிட மொழிகளில் செம்மொழி - தகுதியும், அரசாணையும்

கன்னடம், தெலுங்கு இரண்டு மொழிகளின் பண்டை இலக்கியங்களைச் "செம்மொழி இலக்கியங்கள்" என்று மத்திய அரசு சென்ற நவம்பர் ஒன்றாம் தேதி அறிவித்துள்ளது. தேர்தலுக்குச் சில மாதங்களே இருப்பதால் கர்நாடக, ஆந்திர மாநில அரசுகள் கொடுத்த அரசியல் அழுத்தங்களினால் இந்த அரசாணை (Government Order) கிடைத்துள்ளது. முதன்முதலில் இத்தகுதியை இந்திய அரசு அறிவித்தது தமிழுக்குத்தான். ஓர் ஆண்டு கழித்தே வடமொழியைச் செம்மொழி என்று 2005-ல் அறிவித்தது. தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள் கிடைத்ததாலும், தமிழ்நாட்டு அரசாங்கம் எடுத்த முயற்சிகளாலும், ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர்கள் உலகப் பல்கலைக் கழகங்களில் நடாத்திய ஆராய்ச்சி முடிபுகளாலும் தமிழைச் செம்மொழி என்ற அரசாணையைப் பெறுதல் சாத்தியம் ஆனது. மேலைநாட்டார் என்று எடுத்தால், எல்லீஸ், கால்டுவெல், போப், தொடங்கி இன்று இருக்கும் பேராசிரியர்கள் சுவலபில், பார்ப்போலா, ஹார்ட் போன்றோரின் பணி நினைவுக்கு வருகிறது. நண்பர் ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) எழுதிய தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய கடிதம் இணைய உலகிலும், அரசியல் அரங்கங்களிலும் வெகுவாகப் பேசப்பட்டது.
http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html
இன்னும் சில திராவிடவியல், தமிழ்ப் பேராசிரியர் பீடங்களைப் பல்கலைக்கழகங்களில் நடுவணரசும், தமிழ்நாட்டு அரசும் மக்களும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படுத்த 2004-ன் செம்மொழி அறிக்கை காலப்போக்கில் உதவும்.

தமிழ்நாட்டின் அரசாங்கம் செம்மொழி அறிவிப்பை டெல்லியிலிருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டபோது சில கன்னடப் பேராசிரியர்கள் தமிழ் இலக்கியத்தின் தொன்மை குறித்தே சில கேள்விகள் எழுப்பித் தடைகள் போட முயன்றனர் என்பதை 'அவுட்லுக்' இதழின் கட்டுரை (2004) தெரிவிக்கிறது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி கிடைத்ததும், கன்னடத்துக்கும் வேண்டும் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

திராவிட மொழிகளின் முதல் கல்வெட்டு, இலக்கியங்கள்:

K. Zvelebil, The Smile of Murugan - On Tamil literature of South India. Leiden: E. J. Brill, 1973. The Chart I in page 9 is reproduced below:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9802&L=INDOLOGY&P=R5787
கன்னட கவிராஜமார்க்கம் (கி.பி. 850), தெலுங்கு நன்னய பட்டரின் மகாபாரதம் (11-ஆம் நூற்றாண்டு), மலையாள இராமசரிதம் (14-ஆம் நூற்றாண்டு) - முதல் இலக்கியங்கள் காலத்தால் பிற்பட்டும், பாடுபொருள் ஆரியமொழி இதிகாசங்களையும், இலக்கணத்தையும் அடியொற்றி இருப்பதைக் காணலாம்.

2004-ஆம் ஆண்டு மத்திய அரசின் செம்மொழி அறிவிப்பின் ஏற்படும் விளைவுகளை மொழியியலார் மா. சு. திருமலை எழுதியிருந்தார்:
http://www.languageinindia.com/oct2004/classicaltamil1.html
இந்த அறிவிப்பின் பின்னர் தெலுங்கு, கன்னட நாட்டார் தங்கள் மொழிகளைச் செம்மொழிகள் (classical languages) என்னும் அரசாணை பெற முயற்சிகளை முடுக்கி விட்டனர்; தம் இலக்கியங்கள் 2000-2400 ஆண்டுகள் பழமை உடைத்து என்று அவ்வரசுகளும், ஆசிரியர்களும் அறிவித்தனர். (உண்மையில் இந்தச் சிலாலிகிதங்கள் பிராகிருதத்தால் ஆனவை, கன்னடமோ தெலுங்கோ அல்ல என்பது வேறு விஷயம். பாரத, இராமாயணங்களின் வழிநூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம் பாணினீயத்தின் எழுத்துக்களை அப்படியே ஏற்பதால் வடசொற்கள் ஏராளமாகக் கன்னடம், தெலுங்கில் உள்ளன. வடமொழிச் சொற்கள் இல்லாமல் தமிழைத் தவிர ஏனைய மூன்று திராவிட மொழிகளும் இயங்கா.) உதாரணமாக, தெலுங்கு 2400 ஆண்டுப் பழமைக்கு உரித்தனாது என்றனர்!!
Telugu is 2,400 years old, says ASI
கன்னட நாட்டினர் செம்மொழிக்கு வேண்டிய நான்கு தகுதிகளும் கன்னடத்திற்கு உள்ளது என்றனர்:
http://www.hindu.com/2005/05/27/stories/2005052703230500.htm http://www.hinduonnet.com/2006/08/08/stories/2006080812740300.htm

மத்திய அரசு முன்பே நிர்ணயித்துள்ள நான்கு தகுதிகளும் என்னென்ன? என்று பார்ப்போம்.
Criteria For Classical Language

New category of languages as `Classical Languages' was created by Government of India, and the following criteria were laid down to determine the eligibility of languages to be considered for classification as a `Classical Language':-
i) High antiquity of its early texts/recorded history over a period of 1500-2000 years.
ii) A body of ancient literature/texts, which is considered a valuable heritage by generations of speakers.
iii) The literary tradition be original and not borrowed from another speech community.
v) The classical language and literature being distinct from modern, there may also be a discontinuity between the classical language and its later forms or its offshoots.

Only two languages, viz. Tamil & Sanskrit have been declared as `Classical languages' originally.

மத்திய அரசின் நிபந்தனைகளில் முக்கியமானது செம்மொழி என்றால் அதன் இலக்கியம் தனித்தன்மை பொருந்தியதாயும் 1500 ஆண்டுகளாவது பழமை உடையதாகவும் இருத்தல் அவசியம். அந்த நிபந்தனைகளைக் கன்னட, தெலுங்குப் பண்டை இலக்கியங்கள் பூர்த்தி செய்வதில்லை. இதனாலேயே தமிழ்ப் பேரா. மு. இளங்கோவன் தன் வலைப்பதிவில் "புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்ட கதை" என்று குறித்துள்ளார்.

அரசியல் அழுத்தம், கிளர்ச்சிகளால் அடைந்த கன்னடச் செம்மொழி அறிவிப்பு கர்நாடகாவில் ராஜ்யோத்சவக் கொண்டாட்டங்களில் ஒரு பங்காக இந்த ஆண்டு இருந்தது. அது பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைப் பார்க்கலாம். ஆயினும், சென்னை உயர்நீதி மன்றில் தகுதி நிபந்தனைகளைப் பற்றி வழக்குத் தொடுத்துள்ளனர். அவ்வழக்கின் முடிவு என்ன? நீதிபதிகளின் தீர்ப்பைக் கூர்ந்து படிக்கவேண்டும். மத்திய அரசு நியமித்த அறிஞர் குழுவின் உறுப்பினர் முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் இருமொழிகளும் செம்மொழி நிபந்தனைகளுக்குப் பொருந்தாமையை விளக்கியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி,
http://timesofindia.indiatimes.com/India/Telugu_Kannada_get_classical_tag/articleshow/3660666.cms
" The formal declaration would take place on the occasion of the Rajyotsava day in Karnataka and Andhra Pradesh formation day that falls on November 1. However, the decision is subject to the outcome of a pending writ petition in Madras high court.

Decision to grant classical status has come after pressure from politicians of Karnataka and AP. PM's Office had refused to get involved into the emotive issue. Asked for guidance by the culture ministry, PMO said experts group view would be final. A source in the expert group pointed out how VC Kulandai Swamy, a member of the committee, strongly argued that both the languages did not fulfill criterion of antiquity set by the government.

Both the languages have failed on other criterion also. These include: a body of ancient literature which is considered a valuable heritage, literary tradition be original and not borrowed from another speech community and that classical language should be distinct from its modern form."

செம்மொழி அரசாணை அரசியலை 4 ஆண்டுகளாய் அவதானித்ததில் ஒன்று மனத்திற்குப் புலப்பட்டது. கலைஞர் தன் நிலைப்பாட்டைச் சொல்லும் அறிக்கையை நேற்றுப் பார்த்தேன். தமிழரின் ஒற்றுமையின்மை நெல்லிக்காய் மூட்டையாக இருக்கிறது. ஒருவேளை ஈழவர் தெலுங்கோ கன்னடமோ பேசுபவராக இருந்திருப்பரேல் இந்நேரம் டெல்லியில் நம் அண்டை மாநிலத்தவர் அவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொடுத்திருப்பர்.

மலையாளத்துக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் வேண்டிக்கொண்டுள்ளார். செம்மொழி அரசாணை பெறும் அரசியலை நோக்கும்போது இனிவரும் ஆண்டுகளில் எழுத்தும் பண்டை இலக்கியங்களும் இல்லாத தோடா, பிரகுவி, துளு, முண்டா மொழிகளான கசி, சாந்தாலி இன்ன பிறவும் செம்மொழி அறிவிப்பைப் பெற வாய்ப்புக்கள் உள்ளன.

~ நா. கணேசன்

மேலும் உசாவ,
http://www.chennaitvnews.com/2008/11/classical-joke.html http://www.hinduonnet.com/fline/fl2122/stories/20041105004310600.htm

11 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

அன்புடையீர் ஐயா வணக்கம்
செம்மொழி குறித்த தங்கள் பதிவு கண்டு மகிழ்கிறேன்.
தமிழகத்தில் கன்னட,தெலுங்கு செம்மொழி அறிவிப்பு பற்றி அரசியல்காரர்களோ,தமிழறிஞர்களோ வாய் திறவாமல் இருக்கும் சூழலில்
சான்றுகளுடன் தங்கள் கருத்தை நிலைநாட்டியுள்ளமைக்கு நன்றியன்.

தொல்காப்பியம்,சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் நூல்கள் நாம் படித்துச் சுவைக்கவேண்டிய கலைக்கருவூலங்கள்.

அவற்றை நுகர்ந்து,வெளிப்படுத்தும் ஆற்றலர் குறைவாகவே இன்று உள்ளனர்.

பதிற்றுப்பத்து நூல்கொண்டு தமிழ்ச் சேர மன்னர்களின் வரலாற்றைப் படிக்கும்பொழுது நம்பெருமையையும் இலக்கியச் செழுமையையும்
ஒருசேர விளங்கிக் கொள்ளமுடியும்.

தமிழுக்குப் பாதுகாப்பாக அணைகட்டி காத்த தங்களைப் போற்றுகிறேன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி

Anonymous said...

கணேசன்,

சென்னையில் பேசப்படும் கீழ்த்தரமான தமிழுக்கு தனியே செம்மொழி பட்டம் கொடுத்து கெளரவ்வப்படுத்தலாமே.செய்வார்களா?

முனைவர் அண்ணாகண்ணன் said...

பயனுள்ள சுட்டிகளுடன் கூடிய சிறப்புமிகு கட்டுரை.

எங்கள் மொழி, செம்மொழி ஆனால், அதன் மூலம் கூடுதல் நிதி கிடைக்கும். தமிழர்கள்தான் எதிர்ப்புத் தெரிவித்துக் கெடுக்கிறார்கள் எனக் கன்னட இதழாளர் ஒருவர் என்னிடம் பேசும் போது குற்றம் சாட்டினார்.

என் உடன் பணியாற்றும் தெலுங்கு இதழாளரோ, இந்தச் செம்மொழி அங்கீகாரத்திற்காக நீங்கள் வாழ்த்துத் தெரிவிக்க மறந்தது ஏன் என்றார்.

தகுதியில்லாது பெற்ற அங்கீகாரம் இது என்பதை அவர்கள் இருவருக்கும் எப்படி விளக்குவது?

அண்மையில் வெங்கட் சாமிநாதனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, மலையாளத்தில் பெரும்பாலான சொற்கள் நமக்குப் பொருள் புரிகின்றன என்று கூறினேன். தமிழை மூக்கால் பேசினால் அது மலையாளம்தானே என்றார் அவர்.

தமிழ் - வடமொழிக் கலப்பினால்தான் இந்த மொழிகள் உருவாயின என்பதை இந்த மொழியினருக்கு அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டியுள்ளது.

-/சுடலை மாடன்/- said...

சிரத்தையெடுத்து ஆதாரங்களுடன் செம்மொழிகளின் தகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவற்றுக்குள் செல்லாமல் ஒரு (செம்)மொழி அரசியல் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமென்ன தோடா, துளு கூட 'செம்மொழி' என்ற சிறப்பைக் கோரட்டும். அதற்கு நம் ஆதரவைத் தரவேண்டும். இந்தியை தமிழகத்துக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றாலும் இந்தி கூட செம்மொழி என்ற சிறப்பைக் கோரினால் நாம் ஆதரிக்கலாம். ஏனெனில் அவையெல்லாம் மக்கள் பேசும் மொழி, இன்னும் புழக்கத்தில் உள்ள மொழி. செத்துப் போன சம்ஸ்கிருதத்திற்கு இந்தியாவின் அனைத்து உயிருள்ள மொழிகளுக்கும் மேலான சிறப்பு செய்வதும், மிக அதிகமான பணத்தை வாரி இறைப்பதையும்தான் எதிர்க்க வேண்டும்.

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகள் திராவிட மொழிகள். அவற்றைத் தமிழர்களே ஆதரிக்கும் பொழுது (ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்த அல்ல) தென் மானிலங்களிடையே/மக்களிடையே உறவுகள் பலப் படும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே காவிரி பிரச்னையிலிருந்து முல்லைப் பெரியார் வரை சமஸ்கிருத அடிவருடிகள் (எல்லா மானிலங்களிலும்) நமக்குள்ளே வெறுப்பை அதிகப் படுத்துகிறார்கள். எதிர்க்கப் பட வேண்டியது மக்களை அடிமைப் படுத்தும் சமஸ்கிருதமே.

நன்றி - சொ.சங்கரபாண்டி

naanjil said...

மிகவும் நன்றி. நல்ல செய்திகள் அடங்கிய கட்டுரை. இது நமது
மக்களாட்சியின் பலவீனத்தைதான் காட்டுகிறது.
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளின் மூல மொழி தமிழ்தான் என்பதை மறுக்காமல் இருந்தால் அதுவே பெரிய காரியம்.
அன்புள்ள
நாஞ்சில் ஏ பீற்றர்

கோவி.கண்ணன் said...

நா.கனேசன் ஐயா,

உங்கள் கருத்தில் சற்று மாறுபடுகிறேன்.

கன்னடம் மற்றும் தெலுங்குக்குக் கொடுத்தது போல் மலையாளத்துக்கு மற்றும் ஏனைய 21 மொழிகளுக்கும் கூட செம்மொழி தகுதி கொடுக்கட்டும்.

நடிகர்கள், அரசியல்வாதிகள் கெளரவ டாக்டர் பட்டத்துக்கு ஆசைப்படுவது போல் தான் அவர்கள் செம்மொழி தகுதி கேட்பது. கெளரவ பட்டமாக செம்மொழி தகுதி வழங்கட்டும். வளர்ச்சி இல்லா மொழிகள் அழியும் என்பது உலக மொழியியல் வழக்கு. தமிழ் தவிர்த்து வடமொழிக்கோ, பிறமொழிகளுக்கோ செம்மொழி தகுதி கொடுப்பது குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நாம் படித்து பட்டம் பெற்ற டாக்டர் என்றால் அவர்கள் கவுரவ டாக்டர்கள் தான், கவுரவ டாக்டர்கள் மருத்துவம் பார்க்க முடியுமா ?

மற்ற மொழிக்காரர்களுக்கும் செம்மொழி தகுதி கொடுப்பது குறித்து நாம் உணர்ச்சி வசப்படலாகாது என்பது என்கருத்து. மொழி வெறி தவிர்த்து அவர்களுக்கெல்லாம் மொழி வளர்ச்சியில் ஆர்வம் கிடையாது. ஒரு அங்கீகாரத்திற்கு மட்டுமே கேட்கிறார்கள், பிழை இத்துப்போகட்டும். :)

பழமைபேசி said...

வணக்கம்! நல்ல பல தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!!
தமிழின் தொன்மை, சிறப்பு ஆகியனவற்றைத் தமிழனே புறந் தள்ளும் அபாயம். அவற்றையே எண்ணி எண்ணி விரக்தியில் இருக்கும் இத் தருணத்தில், என் மனம் அதை விட்டு வெளியே வந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகிறது என்பதே என் நிலை அண்ணா.

நல்ல படைப்பு! நன்றி!!

Anonymous said...

வணக்கம்.
நாம் எதிர்பார்த்ததுபோல் மலையாளமொழியும் செம்மொழிக்கு உரிய தகுதி கேட்டு அரசியலாக்கப்பட உள்ளது.தமிழர்களின் ஏமாறும் இயல்பால்
தங்களின் செம்மொழி பகல்கனவு நிலைக்கப்போவதில்லை.ஆம்.
இந்து நாளிதழ் 10.11.2008 பக்கம் 12 இல்(சென்னைப்பதிப்பில்) கேரள கல்வி அமைச்சர் திரு பேபி அவர்கள் நடுவண் அரசை அண்மி மலையாளத்தைச் செம்மொழியாக அறிவிக்க உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
போகிற போக்கில் பார்த்தால் பேச்சுமொழியாக மட்டும் உள்ள வக்கிரபோலி மொழி(நரிக்குறவர்களின் பேச்சுமொழி) செம்மொழியானாலும் ஆகலாம்.அவர்களும் நம் நாட்டு உடன்பிறப்புகள்தானே!அவர்களுக்கும் ஒப்போலை உரிமை உள்ளதே!
மு.இளங்கோவன்
புதுச்சேரி

Sathis Kumar said...

சிறப்பானதொரு வலைத்தளம். பிளாகரில் பின்தொடரும் வாசகர் பட்டியல் என்ற செயலி ஒன்று உளது. அதனை உங்கள் வார்ப்புருவில் இணைத்தால், வாசகர்கள் உங்கள் வலைத்தளத்தோடு ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது வெறும் பரிந்துரையே..

Anonymous said...

காகிதப் பூக்கள் எல்லாம் கடவுளை அலங்க ரிக்கப்
போகிற இந்த நாளில் பூனையும் புலிநான் என்னும்
சோகையில் விழுந்தோன் கூடச் சுந்தரன் ஆகக் கூடும்
ஆகிற வெற்றி யெல்லாம் அரசியல் விளையாட் டுத்தான்

இலந்தை
சந்தவசந்தம் மரபுக்கவிதைக் குழு

Anonymous said...

இரா. சம்புகன், தமிழ் செம்மொழி அறிவிப்பு பித்தலாட்டமும்-அம்பலமும், மண்மொழி, செப்-அக். 2008, கட்டுரையும் படிச்சுப் பாருங்க.

http://www.keetru.com/manmozhi/sep08/sampukan.php

நன்றி,
M. சுப்பிரமணியன், பழனி