ஒளிச்சேர்க்கை அறிவியல் அளிக்கும் மின்சாரம்

உலகத்தில் சூரிய ஒளியின் ஆற்றலை ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்னும் செயலால் தமக்குப் பயன்படும் ஆற்றலாகத் தினந்தோறும் தாவரங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலை, சொல்பம் மிச்சம் இருந்தாலும் எட்டாத உச்சிக் கொம்புக்கு அதன் விலை ஏறிவிடும். எனவே, ஒளிச்சேர்க்கை செயல்படும் விஞ்ஞானத்தை அறியப் பலவகை ஆய்வுகள் நடக்கின்றன.

அமெரிக்காவிலே முதன்மையான பொறியியற் கல்லூரி ஆய்வகம் MIT. அங்கே பணியாற்றும் வேதியியல் பேராசிரியர் டேனியல் நோசீரா தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் எளிய, செலவு அதிகம் ஆகாத மின்பகுப்பு (electrolysis) முறைக்குப் புதிய ஒரு வினையூக்கியை (catalyst) கண்டுபிடித்துள்ளார். இக் கிரியாஊக்கியைப் பாவித்தால் தற்போதுள்ள முறைக்கு ஆயிரத்தில் ஒரு பங்கே செலவாவதாலும், சாதாரணமான அழுத்தம், வெதுமம், பிஎச் எண்களில்(room pressure, temperature, pH value) வேதிவினை நிகழ்வதாலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சாதனை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.



இவ்வரிய கண்டுபிடிப்பால் சூரியஒளியில் இருந்து சோலார் நுட்பத்தால் ஆக்கப்படும் மின்சக்தியை இரவில் உபயோகிக்க வழிவகை கிடைத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பத்தின் பலனாக, ஒரு வீட்டின் மின்தேவையைப் பூர்த்திசெய்யும் சோலார்+மின்கலம் அமையம் (photovotaic + fuel cell system) சில இலட்சம் ரூபாய்களுக்குச் சந்தைக்கு வரும்.



http://web.mit.edu/newsoffice/2008/oxygen-0731.html
http://www.sciencemag.org/cgi/content/abstract/1162018v1

3 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
தங்களின் அரிய தகவலுக்கு நன்றி.
மு.இளங்கோவன்

கோவை சிபி said...

அரிய கண்டுபிடிப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நல்லதொரு அறிவியல் தகவலைத் தமிழில் அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.