புற்றுநோய் கொல்லி - கான்சியஸ் ரேடியோஅலை எந்திரம்'கேன்சருடன் ஒரு யுத்தம்' எனும் பதிவை புற்றுநோய்ப் போராளி அனுராதா அம்மையார் எழுதி வருவதைப் படித்து வருகிறீர்களா? http://anuratha.blogspot.com/

ஹ்யூஸ்டன் நகரின் பெரிய மருத்துவ மனையில் ஒரு வியத்தகு புற்றுநோய் நீக்கும் ரேடியோ அலைகள் எந்திரத்தை மரு. ஸ்டீவன் கர்லி குழு சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றது. இம்முறையில் ஜாண் கான்சியஸ் என்னும் பென்சில்வேனியாக்காரர் கண்டுபிடித்த ரேடியோஅலை தாக்கி எந்திரம் செலுத்தும் அதிரலைகளும் நவீன 'நேனோ' துகளியல் அறிவியலால் (Nanoparticle Science) ஏற்பட்ட பொன்-நுண்ணிகளும்(gold nanoparticles) இணைந்து செயல்படுவதால் பக்க விளைவுகளால் (side effects) ஊறு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை, ரசாயன வேதி சிகிச்சை (chemo therapy) இல்லாமலே புற்று நோய்களைக் குணப்படுத்தச் சாத்தியங்கள் பல உள்ளன என்று ஆராய்ச்சி வல்ல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிபிஎஸ் வீடியோ படம்:மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Non-invasive_RF_cancer_treatment
Sending cancer a signal:
http://www.southcoasttoday.com/apps/pbcs.dll/article?AID=/20071111/NEWS/711110306
John Kanzius interview (45 minutes):
http://video.google.com/videoplay?docid=5456334852158610212

2 comments:

நா. கணேசன் said...

test

மதுரையம்பதி said...

மிக நல்ல தகவல். நன்றி கணேசன்.