அமெரிக்காவில் போப்பரசர்

உரோமாபுரியின் வாட்டிகன் நகரில் இருந்து போப்பையா அமெரிக்கா வருகை தந்துள்ளார். அதனை முன்னிட்டு அவர் செல்லுமிடமெல்லாம் விழாக்கோலம். அவர் அணிந்துள்ள சிவப்புக் காலணிகள் கவனத்தை ஈர்த்துள்ளன, அவை மீண்டும் வாட்டிகன் பயணிக்க உள்ளனவாம்.

நியூ யார்க் நகரிலே க்ரௌண்ட் ஃசீரோவில் மெழுகுவர்த்தித் தீபம் ஏற்றிவைத்து போப் அவர்கள் ஆற்றிய உரை கேட்கலாம்.3 comments:

குமரன் (Kumaran) said...

போப்பை போப்பாண்டவர் என்றும் போப்பரசர் என்றும் அழைக்கும் வழக்கம்/மரபு எப்படி வந்தது என்று தங்களுக்குத் தெரியுமா ஐயா? ஆங்கிலத்தில் அவரை ஆண்டவர் என்றோ அரசர் என்றோ குறிப்பதாகத் தெரியவில்லை. வாட்டிகனில் இருக்கும் அரசாங்க மொழிகளில் ஒன்றில் அப்படி இருக்கிறதோ?

அமர பாரதி said...

குமரன்,

சரியாக கேட்டீர்கள். இது தமிழினத்தின் சாபக்கேடு. சமீப காலமாக நீதிபதிகளைக்கூட நீதியரசர் என்று அழைக்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழா மேடையில் நீதிபதிகளும் இறுமாந்த புன்னகையுடன் அதை கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் அரசனாகவும் ஆண்டவனாகவும் ஆக முயற்சி செய்கிறார்கள். கேவலம் கேவலம்.

நா. கணேசன் said...

அன்பின் குமரன்,

கத்தோலிக்க மதத்தின் உச்சத் தலைவரான போப்பையர் அரச அதிகாரங்களுடன் பல நூற்றாண்டுகளாய் இருந்துவருகிறார். ஐரோப்பாவில் என்றுமே அரசாங்க நிகழ்வுகளில் போப்பாண்டவரின் பங்கு கணிசமாக உள்ளது. போப்பின் அரசவை பல மன்னர்கள் அவையை விட ஆரணங்களும் அதிகாரமும் பொருந்தியது. விஞ்ஞானம் வளர்வதற்குத் தடையாக போப்பின் நிர்வாகம் விளங்கியிருக்கிறது. உ-ம்: உலகம் பிரபஞ்சத்தின் மையம் அன்று என்று சொன்ன கலீலியோவுக்கு வத்திகன் அரசாங்க வழக்குகள். ஐரோப்பாவின் இருண்ட காலத்திற்கு ஒரு முக்கியக் காரணம் போப்பையா ஆட்சிகள் என்று வரலாற்று அறிஞர் குறிப்பிட்டுள்ளனர். அச்சு நுட்பம் சீனாவில் இருந்து வெனிசுக்கு வந்த பின்னர் ஐரோப்பா எங்கும் பரவிற்று. விளைவு: பைபிள் பேச்சு மொழிகளாய் இருந்தவற்றில் எழுதப் பட்டன, தொழுகைகளுக்கும் ஆளாயின. ஸ்ரீமான் பொதுஜனம் பிரெஞ்சு, செர்மனியம், இத்தாலியன், ... இவற்றில் படித்தனர். இலத்தினத்தையே உயர்த்திப் பிடித்த போப்பரசரை விட்டுவிட்டு மார்ட்டின் லூதர் ப்ரொட்டெஸ்டண்ட் மதத்தைத் தாபித்தார். 19-ஆம் நூற்றாண்டிலே தான் போப்பின் அரச அதிகாரங்களைக் குறுக்கி, வத்திகனில் அடைத்து, ரோமாபுரியை இத்தாலிய அரசாங்கங்கள் எடுத்துக் கொள்கின்றன. கம்யூனிசத்தை உடைப்பதில் மறைந்த போப் ஜான் பாலின் பங்கு அளப்பரியது. ரோனால்ட் ரீகன் போப்பாண்டவரைத் தொலைக்காட்சிகளில் இதற்காக நன்கு பயன்படுத்தினார். அரசர், ஆண்டவர் என்று போப்பைச் சொல்லும் வழக்கம் தமிழிலும் பழையது: சர்வகலாசாலை வேந்தர், நீதிமன்ற அரசர், ...
என்பதெல்லாம் போல.

அன்புடன், நா. கணேசன்