ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008)

புகழ்வாய்ந்த விஞ்ஞானக் கதைசொல்லியும், செய்கோள்கள் (satellites) நம் உலகிற்கு மேலே
வட்டமாய்ச் செல்லும் கிளார்க் பாதையைக் கணக்கிட்டவருமான ஆர்தர் சி. கிளார்க் இயற்கையோடு இன்றுக் கலந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேல் கொழும்பு நகரத்தில் வசித்தவர் கிளார்க். இன்று நாம் பயன்படுத்தும் அதிதுரிதத் தொலைக்காட்சி, போன்கள், இணையம் போன்றவற்றின் அடிப்படை ~ மனித குலத்தின் தொடர்பாடலுக்குக் ~ கிளார்க் வட்டப்பாதை.


Clarke Orbit computation:
http://newton.ex.ac.uk/research/qsystems/people/sque/physics/geostationary-orbit/

The 1945 Proposal by Arthur C. Clarke for Geostationary Satellite Communications
http://lakdiva.org/clarke/1945ww/

5 comments:

nayanan said...

செய்கோள் = Sattelite என்ற அருமையான சொல்லைக் கண்டு மகிழ்ந்தேன்.

செய் கோள் என்பதுதான் சரியான பொருளைத் தருவதாக இருக்கிறது.

பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

செல்வா said...

துணைக்கோள் என்பது ஒரு கோளைச் (planet) சுற்றிவரும் அளவில் பெரிதான பொருள். துணைக்கோள் = Satellite. இதனைத் தமிழில் செயற்கைத் துணைக்கோள் என்று சொல்லலாம், அல்லது செயற்கை நிலா, செயற்கைமதி எனலாம். இலங்கை நண்பர்கள் செய்மதி என்று கூறுகிறார்கள். அது நல்ல சொல்லாக இருப்பதாக நானும் நினைக்கிறேன். நண்பர் கணேசன் "கோள்" என்னும் சொல்லை விரும்பினால். செய்துணைக்கோள் என்று சற்று நீட்டிச் சொல்வதுதான் வழி. நிலாவுக்கு, மதி என்னும் சொல் தமிழ்ச்சொல் என்றும், மதி --> மாதம் --மாதிகை (monthly) என்று பாவாணர் எழுதியிருந்ததை நினைவில் கொண்டால், செய்மதி என்பதும் சிறந்த சொல்லாகப் படும்.

அன்புடன் செல்வா

செல்வா said...

துணைக்கோள் என்பது ஒரு கோளைச் (planet) சுற்றிவரும் அளவில் பெரிதான பொருள். துணைக்கோள் = Satellite. இதனைத் தமிழில் செயற்கைத் துணைக்கோள் என்று சொல்லலாம், அல்லது செயற்கை நிலா, செயற்கைமதி எனலாம். இலங்கை நண்பர்கள் செய்மதி என்று கூறுகிறார்கள். அது நல்ல சொல்லாக இருப்பதாக நானும் நினைக்கிறேன். நண்பர் கணேசன் "கோள்" என்னும் சொல்லை விரும்பினால். செய்துணைக்கோள் என்று சற்று நீட்டிச் சொல்வதுதான் வழி. நிலாவுக்கு மதி என்னும் சொல் தமிழ்ச்சொல் என்றும், மதி --> மாதம் --மாதிகை (monthly) என்று பாவாணர் எழுதியிருந்ததை நினைவில் கொண்டால், செய்மதி என்பதும் சிறந்த சொல்லாகப் படும்.

அன்புடன் செல்வா

Unknown said...

ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008) பற்றிய செய்தியை தந்தமையால் ஆர்தரின் மறைவினை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆர்தருக்கு வணக்கம்.

நன்றி
அன்புடன்
ராதாகிருட்டிணன்

செல்வா said...

ராதாகிருட்டினன்,

நீங்கள் தமிழ் விக்கிப்பீட்யாவின் முதல்
பக்கத்துக்குச் சென்றாலே, ஆர்தர் சி. கிளார்க்கைப்பற்றிய கட்டுரைக்கான சுட்டி கிடைக்கும். சென்று பார்க்க வேண்டுகிறேன்.
http://ta.wikipedia.org/

நேரடியாக கட்டுரைக்குப் போக வேண்டும் என்றால் கீழ்காணும் சுட்டியை சொடுக்குங்கள்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D

அன்புடன் செல்வா